பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா சல் உடுக.

(இ-ள். குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல்லப்பட்ட இடத்தை யுடைத்து என்றவாறு,

எனவே, இரவிற்குறி, பகற்குறி என் இருவகைப்படும் என்பது கொள்ளப்படும். (PD) தச்சினார்க்கினியம்

அங்கனங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது.

(இவள்.) குறியெனப் படுவது குறியென்று சொல்லப் படுவது; இரவினும் பகலினும் . இரவின்கண்ணும் பகலின் கண்ணும்; அறியத் தோன்றும் ஆற்றது என்ப - தலைவனுந் தலைவியுந் தானும் அறியும் படி தோன்றும் நெறியையுடைய இடம் (எ-று)..?

நெறியென்றார் அவன் வருதற்குரிய நெறி இடமென்றற்கு. அதுவென்று ஒருமையாற் கூறினார், தலைப்பெய்வதோரிடமென். னும் பொதுமைபற்றி, இரவு களவிற்குச் சிறத்தலின் முற்கூறி ாைர். அறியத் தோன்றுமென்றதனாற் சென்று காட்டல் வேண்டா நின்று காட்டல் வேண்டுமெனக் கொள்க ! (க.க) ஆய்வுரை

இது, களவொழுக்கத்தில் தலைவன் தலைவி இருவரும் மறைவிற் கலந்து அளவளாவுதற்குரிய குறியிடமாவது இதுவெனக் கூறுகின்றது.

(இ - ள்.) குறி என்று சொல்லப்படுவது இரவிலும் பகலிலும் த லைவன் தலைவி இருவரும் தம்முள் அறியச் சொல்லப்பட்ட வழி யினையுடைய இடம் என்பர் ஆசிரியர் எ - று.

ஆற்றது . வழியினையுடையது : குறிப்பு வினைமுற்று. ஈண்டு ஆறு என்றது குறியிடத்தை எளிதிற் சென்று சேர்தற்குரிய வழியினை. இத்தகைய வழியமையாத இடம் எதுவும் குறியாகாது என்பார்

1. குறி என்பது குறிக்கப்பட்ட இடத்தையுணர்த்தியது .

2. அறியத்தோன்றுதலாவது, குறியிடத்துச் செல்லுதற்கு உரியராகிய தலைவனும் தலைவியும் தெளிவாக அறிந்து கொள்ளும் அடையாளமுடையதாகப் புலப்படுதல்.

3. இது மறைவில் நிகழும் ஒழுகலாறாகிய கள வாதல் தோன்றச் சென்று

காட்டல் வேண்டா, கின்று காட் டல் வேண்டுமெனக் கொள்க’ என்றார்.