பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இது தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஐதுவர லசைவளி மாற்றக் கைபெயரா ஒலியியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கித் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெத் நொய்யென மறம் புகன் மழகளி று நங்கு நாடன் ஆர மார்பின் அனிமிஞ றார்ப்பத் தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன் காவல ரஜிதல் ஒம்பிப் பையென விழாக் கதவ மசையினன் புகுதந் துயங்குபட ரகல முயங்கித் தோண்ானந் தின்சொ லளை இப் பெயர்ந்தனன் தோழி இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன் தல்கா மையின் அம்ப லாகி ஒருங்குவத் துவக்கும் பண்பின் இருஞ்து .ேழாதி ஒண்ணுதற் பசப்பே.’’ (அகம், 192}

இது மனையகம் புக்கது.

தலைவி புறத்துப் போகின்றாளெனச் செவிலிக்கு ஒர் ஐயம் நிகழ்ந்தவழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழுமென் றுணர்க, (சல்)

ஆய்வுரை

இரவுக்குறியின் இயல்பு உணர்த்துகின்றது.

(இ-ள். இரவுக்குறியாவது, தலைமகளது இல்வரைப்பினுள் மனையிலுள்ளோர் கூறும் சொற்கள் கேட்கும் அணிமைக்கண் மனைப்புறத்து அமைவதாகும்; மனையின் உள்ளிடத்துத் தலைவன் புகாதநிலைமைக்கண் எ-று.

இரவுக்குறியே என்பதன் ஏகாரம் இருவகைக் குறியிடங். களுள் ஒன்றினைப் பிரித்துக் கூறலின் பிரிநிலையேகாரம். மனை. யோர்கிளவி . வீட்டினுள்ளே வாழும் தலைவி, தோழி, செவிலி முதலியோர் தம்முட் பேசிக்கொள்ளும் சொற்கள். களவொழுக்கம் ஒழுகும் தலைவன் தலைமகளது இல்வரைப்பினுள் மனைப்புறத்தன்றி மனையகத்தே புகுதல் இரவுக் குறியாகாதென விலக்குவார்