பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா - உடுக

நச்சினார்க்கினியம்

இது தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றது. இரு வகைக் குறி பிழைப்பாகியவிடத்தும் என்புழித் தலைவி அல்ல குறிப்படுதல் கூறிற்று.

(இ - ள்.) அவன் குறி - தலைவன் தன்வரவு அறிவிக்குங் கருவிகள்; மயங்கிய அமைவொடு வரின் அவன் செயற்கை யான்ைறி இயற்கைவகையானே நிகழ்ந்து தோழி மயங்கிய அமைதியோடே வருமாயின்; அல்ல.குறிப் படுதலும் - குறியிடத்துக் கூட்டுங்கால் அ வ்வல்லவாகிய குறியிலே மயங்குதலும்; அவள்வயின் உரித்து அத் தோழியிடத்து உரித்து (எ - று).

வெறித்தல் வெறியாயினாற்போலக் குறித்தல் குறியாயிற்று. அக் கருவி புனலொலிப்படுத்தல் முதலியன.

உ -ம்: கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ

இடையு ளிழுதொப்பத் தோன்றிப்-புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி. (ஐந்திணை ஐம், 49)

இஃது அல்ல.குறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறியது.

எறிசுதா நீள் கடல் ஒத முலாவு நெறியிறாக் கொட்கு நிமிர்கடற்றண் சேர்ப்பன் அறிவுறா வின்சொ லணியிழையாய் நின்னிற் செறிவற செய்த குறி ? (திணை. ஐம். 43)

இஃது அவன்மேற் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறியது.

1. அவள் என்னும் சுட்டு, மேற்குத்திரத்திற் குறிக்கப்பட்ட தலைமகளைச் சுட்டுமேயன்றித் தோழியைச் சுட்டாது. அன்றியும் அகத்தினையொழுகலாற்றில் "அவன்' எனவும் "அவள் எனவும் வரும் சுட்டுப் பெயர்கள் முறையே தலைவனையும் தலைவியையும் குறித்து வழங்குதலே மரபாகும் என்பது 'தன்னும் அவளும் அவனும் சுட்டி என்றாங்கு வரும் தொல்காப்பியத் தொடர் கள ல் கன்கு துணியப்படும். அல்ல குறியிற் சென்று மீள்வாள் தலைமகளேயன்றித் தோழியல்லள் என்பதும் இங்குக் கருதத் தகுவதாகும். தலைவன் செய்த அடையாளங்கள் இயற்கைச் சூழல்களால் மயங்கிய கிலைமைக்கண் அல்ல.குறிப்படுதலும் தலைமகட்கு உரித்து

என்பதே இதன் பொருளாகும்.