பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வியல் - நூற்ப க $ $

கந்தருவ வழக்கில் மெய்யுறு புணர்ச்சி முதற்கண் தோற்றுவது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாமளவும் கூடிவாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்றாது தம்மெதிர்ப் பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு. இங்ங்னம் மாறாது என்றும் பிரியா நிலையில் நி ைற க ட வா து அன்பினாற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் மறையோர்தேளத்து மன்றலாகிய கந்தருவத் திற்கும் இடையேயுள்ள உயிர்நிலையாகிய வேறுபாடாகும். அன் பொடு புணர்ந்த ஐந்திண்ைமருங்கிற் காமக் கூட்டம்” எனத் தொல் காப்பியனாரும், 'அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவ்ே' (குறுந் தொகை-கல்) எனப் பிற சான்றோரும் உள்ளப்புணர்ச்சி ஒன்றையே களவுக்குரிய சிறப்பியல்பாகக் குறித்துள்ளமை காணலாம். ஆரிய மணமாகிய கந்தருவத்திற்கும் தமிழர் ஒழுகல்ாறாகிய களவிற்கும் உள்ள இவ்வேறுபாட்டினையும் தமிழிலக்கணம் கூறும் களவ்ொழுக் கத்தின் தூய்மையினையும் ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவுறுத் தும் நோக்குடன் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, கந்தருவத்திற்கும் களவிற்கும் உள்ள வேற்றுமையினை இ னி து விளக்குவதாகும். கந்தருவர்க்குக் கற்பின்றியமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் கள்வே அமையாது என்றற்குத் துறையமை’ என்றார் (க்ளவியல்-1) என இவ்விரண்டற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை நச்சினார்க் கினியர் விளக்கிய திறம் இங்கு நினைக்கத்தகுவதாகும்.

ஆடவரும் மகளிரும் உணர்வினால் ஒத்து வாழ்வதற்குரிய இவ்வுலகியல் வாழ்வில், மகளிரை அஃறிணைப் பொருள்களாகிய உடைமைபோலக் கருதி ஆடவர்கள் அவர்களைப் பெற்றோர் முதலிய சுற்றத்தார்பாற் கேட்டுப் பெறுதலும் அன்ன்ோர் கொடாராயின் அவர்கட்குத் தெரிந்தோ தெரியாமலோ வலிதிற் கவர்ந்து செல்லு தலுமாகிய இச் செயல்களை மண்மெனக் கூறும் வழக்கம் தமிழியல் மரபுக்கு ஒவ்வாததாகும். ஆகவே இத்தகைய பொருந்தா மணமுறை களுக்குத் தமிழில் இலக்கியங் காணுதலரிது. 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை யெனவே அதன் முன்னும் பின்னும் கூறப்பட்ட ஒரு தலைக் காமமாகிய கைக்கிளையிலும் ஒவ்வாக் காமமாகிய பெருந் திணையிலும் இருவர்பாலும் ஒத்த அன்பினைக் காணுதலரிதென்பது பெறப்படும். இத்தகைய பொருத்தமில்லாத் கூட்டுறவுகள் எந்நாட் டிலும் எக்காலத்தும் காண்ப்படுவனவே. உயர்ந்த ஒழுக்கத்திற்கு ஒவ்வாத செயல்களைக் குறிப்பாகச் சுட்டி விலக்கியும் ஒழுக்கத்தால்