பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ; தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தலைவன் ஓ ரையும் நாளும் ஆகிய இவற்றை நீங்கியொழுகுதல் கூடாது எனத் தலைவனுக்குரிய இன்றியமையாத கடமையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது இந்நூற்பாவாகும். சசு. ஆறின தருமை'யும் அழிவும் அச்சமும்

ஊறும் உளப்பட அதனோ ரற்றே. இளம் ஆரணம்

இதுவுமிது. (இ-ள். நெறியினது அருமையும் மனன் அழிவும் அஞ்சு தலும் இடையூறும் தலைவன்மாட்டு நிகழா என்றவாறு (சசு) நச்சினார்க்கினியம்

இதுவுந் தலைவற்கு இல்லன கூறுகின்றது. (இவள் ) உளப்பட நிலவும் இருளும் பகைவரும் போல்வனபற்றிச் செலவழுங்குதல் உளப்பட, ஆறினது அருமையும்நெறியினது அருமை நினைந்து கூட்ட நிகழ்ந்தவழிக் கூறுதலும்; அழிவும் -குறைந்த மனத்தனாதலும், அச்சமும்-பாம்பும் விலங்கும் போல்வன நலியுமென்று அஞ்சுதலும், ஊறும்- அக் கருமத்திற்கு இடையூறு உளவாங்கொலென்று அழுங்குதலும்; அதனோர். அன்ன கிழவற்கு இல்லை (எ று.)

கிழவற்கில்லையெனவே கிழத்திக்குந் தோழிக்கும் உள வாயிற்று. அவை முற்காட்டியவற்றுட் காண்க. (-டு) ஆய்வுரை

இதுவும் தலைமகனுக்குரியதோர் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்.) நெறியினது அருமையும் மன்ை அழிவும் அச்சமும் இடையூறுகளும் உட்பட உளவாகுந் தடைகள் காரணமாகத் தான் மேற்கொண்டுள்ள களவொழுக்கத்தினைத் தவிர்தலும் தலைவனுக்கு இல்லை எ று.

ஆற்றினது அருமையாவது, நடத்தற்கியலாதவாறு ஏற்றிழிவும் பரலும் முள்ளும் புதரும் கடும் புனலாறும் செறிந்தவிருளும்

1. ஆற்றினது அருமை-கடத்தந்கியலாத வழியின் அருமை. களவொழுக்

சழியருமை பற்றிய சைனமும் அச்சமும் இடையூறும் தலைமகனுக்கு இல்லை என்பதாம் ,

2. மறைந்த வொழுக்கத்து ஆறின் து அருமையும் ....., ஊரும் உளப்பட கிழவோ ற்கு இல்லை என் பார், 'அதனோரன்ன" என்றார். கிழவற்கு இல்லை. பெனவே கிழத்திக்கும் தோழிக்கும் உளவrயிற்று என்னும் இவ் விளக்கம் பொருந்த

முடையதே,