பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.க ) தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஆய்வுரை

இது, களவொழுக்கம் தலைவியின் தந்தை தன்னையர்க்குப் புலனாமாறு உணர்த்துகின்றது.

(இ-ள்.) தலைவியின் தந்தையும் தமையன்மாரும் களவொழுக்கத்தினைக் குறிப்பினால் உணர்வர் எறு.

முன்னம் - குறிப்பு. எனவே இவர்க்கு நற்றாய் அறத்தொடு நிற்குங்காலை உரையினால் வெளிப்படக் கூறவேண்டிய இன்றி. யமையாமை இல்லையென்பதாம்.

"தந்தை தன்னையர் ஆயிரு வீற்றும்

முன்னம் அல்லது கூற்றவண் இல்லை'

என்பது இறையனார் களவியல்.

ச.அ. தாய் அறிவுறுதல் செவிலியோ டொக்கும்.

இளம்பூரணம்

என்றது, நற்றாய்க்கு உரியதொரு மரபுணர்த்துதல் துதலிற்று.

(இள்ை.) நற்றாய் களவொழுக்கம் அறிவுறுதல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுத லல்லது தந்தையையும் தன்னையன்மாரையும்போல வெகுடலிலள்! என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின்,

காமர் கடும்புனல்’ எனத் தொடங்கும் கலித்தொகைப் பாட்டி. னுள்,

'அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட

என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்' (கலித்.1ங்க)

எனத் தாய்வெகுளாமை காணப்பட்டது.

"அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி’’ (கலித். கூக)

என்றதனான் வெகுட்சி பெற்றாம். )پنے تی(

1. கற்றாய் தன்மகன் து ஒழுகலாறு குறித்துச் செவிலி கவலைப்படுமளவிற் வலைப்படுதலல்லது தலைமகளை மறைவிற் கூடியொழுகும் தலைவன் மேற் சின்

துதான் என்பதாம்.