பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உம் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

மேன் மேல் உயர்தற்குரிய பண்புடைய நன்னிகழ்ச்சிகளைச் சிறப் பாக வெளிப்படக் கூறி விளக்கியும் மக்கட்குலத்தாரை நன்னெறிப் படுத்துவதே உயர்ந்த நூன்மரபாகும். இம்மரபினை உளத்துட் கொண்டு கைக்கிளை பெருந்திணைகளைக் குறிப்பாகவும் அன்பின் ஐந்திணையை விரிவாகவும் கூறுவர் தொல்காப்பியர்.

2. ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பால தானையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ட மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே.

இளம்பூரணம் :

என் . எனின், இது காமக்கூட்டத்தின்கண் தலைமகனும் தலை மகளும் எதிர்ப்படுந்திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என்பது ஒருவ னும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, அவ்விருவரையும் மறு பிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு. *

ஒன்றி உயர்ந்த பாலதாணையின் என்றது-இருவருள்ளமும் பிறப்புத் தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு :

1. ஒன்று, வேறு என்னுஞ் சொற்கள் முறையே ஒன்றுவித்தல் (சேர்த்து

வைத்தல்), வேறுபடுத்தல் (பிரித்து விலக்குதல்) என்ற பொருளில் இங்கு ஆளப்

பெற்றன. பால்-ஊழ். இருபால்-ஆக லூழ், போகலு ழ் என்னும் இருவகை ஊழ்.

2. ஒன்றியுயர்ந்த பால் - பல பிறப்புக்களிலும் கணவனும் மனைவியுமாகிய இருவரும் உள்ளம் ஒன்றி வாழ்ந்தமையால் மேன்மேலும் அன்பினால் உயர்தற் கேதுவாகிய கல்லூழ். ஒன்றி உயர்ந்த என்புழி ஒன்றி என்னும் செய்தெனெச்சம் 'மழை பெய்து குளம் கிறைக்தது' என்புழிப்போல ஏதுப் பொருளில் வந்தது.

மக்களது வாழ்க்கையில் உயர்ந்ததன்மேற் செல்லும் மன நிகழ்ச்சியே தம்மால் அன்புடையாரை அடுத்துவரும் பிறப்பிலும் மீண்டும் சேர்த்து ஒன்றுவித்து கலந்தரும் கல்லூழாய்ப் பயன் விளைக்கும் என் பார், 'ஒன்றியுயர்ந்த பால்’ என்றார். தன்னை அன்பினால் புரந்த பாரிவேள் இறக்த நிலைலயில் அவன் மகளிரைத் தக் கார்க்கு மணஞ்செய்து கொடுக்கும்படி பார்ப்பாரிடம் ஒப்படைத்து வடக்கிருந்த கபிலர் பாரியை கினைக்து உயிர் விடும் நிலையிற் பாடிய பாடலில்,