பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-്. - தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இதனால் சொல்லியது இருவாற்றானும் அறன் இழுக்கா தென்றவாறு அஃது இழுக்காதவாறு வருகின்ற சூத்திரத்தான்

உணர்க. {θώ}

நக்கினார்க்கினியம்

(இ - ள்.) வெளிப்பட வரைதல் முற்கூறியவாற்றானே களவு வெளிப்பட்டபின்னர் வரைந்து கோடல்; படாமை வரைதல் . அக்களவு வெளிப்படுவதன் முன்னர் வரைந்துகோடல் : என்று ஆ இரண்டு என்ப வரைதல் ஆறே என்று கூறப்பட்ட அவ்விரண்டே. என்று கூறுவர் ஆசிரியர் வரைந்துகொள்ளும் வழியை (எ-று).

'சேயுயர் வெற்பனும் வந்தனன்

பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே.” (கலி 39;

இது வெளிப்பட்டபின் வரைவுநிகழ்ந்தது.

'கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து

வானின் அருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனான் நீப்பினும் வாடன் மறந்தன தோள்.' (ஐந்திணை எழு. 2)

இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது.

  • எம்மனை முந்துறத் தருமோ

தன்மனை புய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம், 195)

என்றாற்போல்வன வெளிப்படுவதன்முன்னர்க் கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் கரணம் நிகழ்ந்தமையின், அது வும் வெளிப்படாமல் வரைந்தத்ாம். {சக)

ஆய்வுரை

இது, தலைவன் தலைவியை வரைந்து கொள்ளும் பகுதி இத்துணை என்பது உணர்த்துகின்றது.

. (இ - ள்.) களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவியை மணந்து கொள்ளுதலும் அது வெளிப்படுதற்கு முன்ரே மணந்து கொள்ளு தலும் என மணந்து கொள்ளும் நெறி இரு திறப்படும் எ. நு .