பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ్రీ శ్రీ డ్రీ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

சிறந்து கற்போடொத்த தாயினும்; ஞாங்கர்க் கிளந்த மூன்று' பொருளாக - முற்கூறிய ஒதல் பகை துரதென்ற மூன்றும் நிமித்தமாக; வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை-வரைவிடைவைத்துப் பிரிதல் தலைமகற்கில்லை (எ-று) . .

மூன்றுமென முற்றும்மை கொடாது கூறினமையின், ஏனைப் பிரிவுகளின் வரையாது பிசியப்பெறும் என்றவாறாயிற்று. அவை வரைதற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தற்குற்றுழிப் பிரிதலுங், காவற்குப் பிரிதலுமென மூன்றுமாம்.

உ-ம்: 'பொன்னடர்ந் தன்ன வொள்ளினர்ச் செருந்திப்

பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையன் திணிமண லடைகரை யலவ னாட்டி அசையின விருந்த வாய்தொடிக் குறுமகள் நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயி னறந்தெரிந்து நாமுதை தேள் மரூஉப் பெயர்ந் தவனொ டிருநீர்ச் சேர்ப்பி னுப்புடனு ழந்தும் பெருநீர்க் குட்டம் புனையொடு புக்கும் படுத்தனம் பணிந்தன் மடுத்தன மிருந்தபிற் ற்ருகுவன் கொல்லேர் தானே விரிதிரைக் கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர்த் தேனிமிர் தண்கரைப் பகுக்குங் கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே. (அகம். 280)

இதனுள் ஈண்டுள்ள பொருள் கொடுத்தாற் பெறல் அரியளாயின் தன்னை வழிபட்டால் தந்தை தருவனோ? அது நமக் கரிதாகலின் இன்னும் பொருள் நாம் மிகத் தேடிவந்து வரைது மெனப் பொருள்வயிற் பிரியக் கருதியவாறு காண்க,

'பூங்கொடி மருங்குற் பொலம்பூ ணே, யே

வேந்து வினைமுடித்து வந்தனர் காந்தண் மெல்விரற் கவையினை நினைமே."

1. ஓதல் பகையே து திவை பிரிவே (அகத்-25) என இப்பிரிவு மூன்றும் முன்னர்க் கூறப்பட்டமையின் ஞாங்கற் கிளங்த மூன்று என்றார். ஞாங்கர்

முன்பு. பொருளாக - காரணமாக.

2, வரையா கி ற் பிரிகவென்னார்’ என்றிருத்தல் வேண்டும்,