பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா நிக உண்டு

இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தான் வரைவு மலிந்தமை தோழி கூறியது ஏனைய வந்துழிக் காண்க, ஒதுதற்கு ஏவுவார் இரு முது குரவராதலின், அவர் வரையாமற் பிரிகவென்றார். பன்கவென்று திறைகோடற்குப் பிரியுங்கால், அன்புறு கிழத்தி துன்புற்றிருப்ப வரையாது பிரிதலின்று. இது துதிற்கும் ஒக்கும் மறைவெளிப்படுதல் (499) கற்பென்று செய்யுளியலுட் கூறுதலின், இதனை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தார். கற்பினோ டொப்பினும் பிரிவின்றெனவே, கற்பிற்காயிற் பிரிவு வரைவின்றாயிற்று. (இல்)

ஆய்வுரை

இது, தலைவனுக்கு உரியதோர் இயல்பு உணர்த்துகின்றது.

(இ-ள்.) களவு வெளிப்பாடு கற்பியல் வாழ்க்கையோடு ஒப்பு. தாயினும் முன்னர்க் கூறப்பட்ட ஓதல், பகை, தூது என்னும் இம்மூன்றும் காரணமாகத் தலைவியை மணந்து கொள்ளாது நெட்டிடைப் (நெடுந்துரம்) பிரிந்து செல்லுதல் தலைவனுக்கு உரிய செயலாதல் இல்லை எ-று.

ஞாங்கர்க் கிளந்த மூன்று என்பன : 'ஓதல் பகையே தூது இவை பிரிவே (தொல், அகத்.27) என முன்னர்க் கூறப்பட்ட மூவகைப் பிரிவுகள், ஞாங்கர் - முன். பொருள் - காரணம். ஓதல், பகை, தூது என்னும் இம்மூன்றும் காரணமாகத் தலைமகளை வரையாது பிரிதல் இல்லை; எனவே வரைவிடைவைத்துப் பொருள் வயிற் பிரிதலும் வேந்தற்கு உறுதுணையாகப் பிரிதலும் நாடு காத்தற்குப் பிரிதலும் தலைமகனுக்கு உண்டு என்றவாறாம்.

களவு வெளிப்பட்ட பின் வரையும் காலத்து இவற்குரியவள் இவள் என எல்ல ரானும் முன்னமே அறியப்பெற்றமையால் அவ். விருவரும் வரைதற்கு முன்னரே கற்புக்கடம் பூண்டவராயினமை வின் அவர்தம் வாழ்க்கை கற்பியல் வாழ்க்கையொடு ஒத்ததாயிற்று என்பார், வெளிப்படைதானே கற்பினோடொப்பினும்’ என்றார் ஆசிரியர். இத்தொடரை,