பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

袭。

荔。

க ளளியல் - நூற்பா உ

"ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்

வருவகை தானே வழக்கென மொழிப” (பொருளியல்.உ.சு) என்பதனானும், இந்நூல் உலக வழக்கே நோக்குதலானும் அவர் பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அதுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மராவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மராவர். இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரத வர் என்னுந் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பிலராவர். (e–)

நச்சினார்க்கினியம்

இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத் தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்ங்ணம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது.

(இ - ள்) ஒன்றே வேறே என்று இரு பால்வயின்-இருவர்க் கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும் ; ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே; 'ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தலைவியும் எதிர்ப்படுப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே - அங்ங்னம் எவ்வாற்றானும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினுங் கடியப்படா (எ - று).

1. "ஒன்றே வேறே என்றிருபால் வயின்' என வரும் இத் தொடரில் பால்' என்பதற்கு நிலம்' எனப் பொருள் கொண்டு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை , 'பால்’ என்பதனை ஊழின் பெயராகக் கொண்டு வழங்கிய தொல்காப்பியனார் கருத்துக்கு மாறுபட்டதாகும். 'பால்' என்ற சொல்லுக்குப் பலபொருள் உண்டெனினும் இந்நூற்பாவில் அச்சொல் ஊழ் என்ற பொருளிலேயே ஆளப் பெற்றுள்ளதென்பது, 'ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்த பால் எனப் பாலின் தொகை சுட்டி அவற்றுள் ஒன்றனைப் பிரித்துரைத்தலால் நன்கு புலனாகும். அன்றியும் ஒன்றே வேறே என்று இருபால்’ எனத் தொல்காப்பியனார் கூறிய இருவகைப் பால்களுள் ஒன்றுவிக்கும் பாலினை ஆக-ழ் (871), ஆக லூழ் (3.72) எனவும் வேறுபடுத்தும் பாலினைப் போ கூழ் (371), இழஆழ் (372) எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளயை இங்கு ஒப்புகோக்கி யுணரத்தகுவதாகும். இந்நூற்பாவிற் சட்டப்பட்ட ஒன்றியுயர்ந்த பால்’ என்பதனை 'உடனுறைவாக்குக உயர்ந்த பாலே (புறம். 236) எனக் கபிலர் இப்பொருளில் எடுத்தாண்டுள்ளமையும் இங்கு நினைக்கத்தகுவதாகும்.