பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் تلو سيg

என்றிரு பால்வயிற் காண்ப’ எனப் பால் வன்பால் மென் பால் போல நின்றது. உயர்ந்த பாலை நோய் தீர்ந்த மருந்து’’’ போற் கொள்க. ஒரு நிலம் ஆதலை முற்கூறினார், இவ்வொழுக் கத்திற்கு ஒதியது குறிஞ்சிநிலமொன்றுமே ஆதற்சிறப்பு நோக்கி. வேறு நிலம் ஆதலைப் பிற்கூறினார், குறிஞ்சி தன்னுள்ளும் இரு வர்க்கும் மலையும் ஊரும் வேறாதலுமன்றித் திணை மயக்கத்தான் மருதம் நெய்தலென்னும் நிலப் பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கி வந்து எதிர்ப்படுதல் உளவாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன்கோடற்கு ஒருநிலத்துக் காமப் புணர்ச்சிப் பருவத்தாளா யினாளை ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற்குப் பாலதாணையிற் காண்ப’ என்றார். எனவே, வேற்று நிலத்திற்காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ங்னந் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பாலதாணை வேண்டு மாயிற்று.

'இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்

புன்தலை ஒரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா தேதில் சிறுசெரு உறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னவிவர் மணமகி ழியற்கை காட்டி யோயே.” (குறுந் , 229)

இஃது ஒரூர் என்றதாம்.

'காமஞ் செப் பாது கண்டது மொழிமோ” (குறுந். 2)

என்றது என் நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே சொல் என்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்றாயிற்று.

'இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே

வானின்று இலங்கும் அருவித்தே தானுற்ற சூள் பேனான் பொய்த்தான் மலை”

என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்தென வியந்து

கூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சியுள்ளும் மலை வேறாயிற்று.