பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா . ஆ.டு:

'செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன்

பெளவநீர்ச் சாப்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கெளவைதோய் உற்றவர் காணாது கடுத்தசொல் ஒவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை”

(கலி. 76)

இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பெளவ தீர்ச் சாய்ப்பாவை தந்தான் ஒருவனென நெய்தனிலத்து எதிர்ப் பட்டமை கூறியது. ஆணை-விதி. கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும் பாலது. ஆணையும் அவ்வாறாம்.'

மிகுதலாவது: குலங் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர், அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தென்று கொள்க. கடி, மிகுதி. அவர் அங்ங்ணம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறு தொடங்கி இரு பத்துநான்கு ஈறாகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்றுயாண்டாக அந்தணன் உயருங் கந்தருவமணத்து; ஒழிந்தோராயின் அத்துணை உயரார். இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல் பிரம முதலி யவற்றான் உணர்க. வல்லெழுத்து மிகுதல் என்றாற் போல மிகு தலைக் கொள்ளவே பிராயம் இரட்டி யாயிற்று. கிழத்தி மி கு த ல் அறக்கழிவாம். 'கிழவன் கிழத்தி’ எனவே பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ங்ணம் ஒருமை கூறிற்றேனும் ஒரு பாற்கிளவி (தொல்-பொ.222) என்னுஞ் சூத்திரத்தான் நால்வகை

1. கற்பின்காறும் ஒன்றும் வேறும் செல்லும். பாலது ஆணையும் அங்

வாறாம்' என்று இருத்தல் வேண்டும்.

2. கடி-மிகுதி என்னும் உரைக்குறிப்பு முன்னுள்ள பொழிப்புரையுடன. தொடர்புடையதாக அமையவில்லை. 'கடி வரையின்று என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு நீக்கும் கிலைமையின்று', 'கடியப்படாது எனப் பொருள் கொள்ளுதலே உரைமரபாகும். இவ்வாறன்றி, 'கடி வரையின் - 'தும் வரையப்படாது என இன் சொல்லாகக் கொண்டு மீண்டும் விளக்கந்தருதலால் 'கடி மிகுதி' என்னுஞ்

சொற் குறிப்புப் பின்னர் எழுதப்பெற்றிருத்தல் வேண்டும் எனத் தோன்றுகின்றது.