பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா - உன

ஒன்றியுயர்ந்த பாலது ஆணை’ யென்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமையா தவராகக் காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென்பார், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப என்றும் கூறினார். பால்து ஆணையாவது, வினைசெய்த உயிர்கள் நுகர்தற்குரிய இருவினைப் பயன்கள் ஏனையுயிர்கள்பாற் செல்லாது வினைகளைச் செய்த உயிர் களே துகரும்வண்ணம் முறைசெய்து நுகர்விப்பதாகிய இறைவனது ஆற்றல். இதனைப் பால்வரை தெய்வம்’ (தொல்-கிளவியாக்கம்-58) என்ற தொடராலும் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம். தலை வனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன: பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும். காணுதலென்றது, தனக்குச் சிறந்தாராகக் கருதுதலை. #3–. சிறந்துழி ஐயஞ் சிறந்த தென்ப

இழிந்துழி இழிவே சுட்ட லான. இளம்பூரணம்

என்-எனின், ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்) ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விருவகையும் உயர்வடையராயின், அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர்; அவர் இழிபுடையராயின், அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டி யுணர்தலான் என்றவாறு, சிறப்பு என்பது மிகுதி, ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல், சிறந்துழி என்பதற்குத் தலைமகள்தான் சிறந்துழியும் கொள்ளப்படும்; அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப் படும். உருவ மிகுதியுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல். இதனாற் சொல் லி ய து உலகத்துத் தலைமக்னும் தலைமகளுமாக நம்மால் வே ண் - ப்ப ட் டார் அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர் மாட்டும் உளராவரன்ற்ே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளுமாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ் விழிமரபினையே சுட்டியுணரா நிற்குமாதலான் (எ-று).

க் துழி - இழிவுடையதாயின் இழிக் துழி இழியே சுட்டலான்;

1. சிறந்துழி - உயர்வுடையராயின் 2. இ! சிறத்தல் - மிகுதல்; உயர்தல். இழிதல்-தாழ்தல். சிறந்துழி ஐயம் சிறந்தது என் ப என இயை யும்

2. அல்லாதார் மாட்டு' என உம்மையின்றி யிருத்தல் பொருத்தமாகும்.