பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரி 1 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம்

இஃது அங்ங்னம் மக்களுள்ளாளெனத் துணிந்து நி ன் ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்துமென்பது உம் அதுகண்டு தலைவியும் அக்கண்ணானே தனது வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பது உங் கூறுகின்றது; எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக் காட்சி கூறுகின்றதாயிற்று.

(இ-ள்) அறிவு-தலைவன் அங்ங்னம் மக்களுள்ளாளென்று அறிந்த அறிவானே, உடம்படுத்தற்கு - தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு; நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும்-தன்னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தை சொல்லும்; குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும்-அவ் வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறுங் கூற்றுந் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம் (எ-று).

நாட்டம் இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரிக்க. இங்ங்ணம் தற்குப் பொருள்கூறல் ஆசிரியர்க்குக் கருத்தாதல் புகுமுகம் புரிதல்' 1. இயற்கைப் புணர்ச்சியிற் காதலர் இருவரிடையே முதற்கண் நிகழும்

காட்சி, ஒருவர் உள்ளக் குறிப்பினை மற்றவர் உணர்ந்து கொள்ளாத நிலைமைக்கண் விருப்புற்றுக் கானும் ஒருமருங்கு பற்றிய கேண்மையாதலின், அஃது ஒருதலைக் காம மாகிய கைக்கிளையின் பாற்படும். அவ்வாறன்றிக் காதலர் இருவர் கண்ணொடு கண்ணினை கோக்கு ஒத்த கிலையில் கிகழும் காட்சி, அவ்விருவரும் மெய்யுறு புணர்ச்சி பெறுதற்கு நிமித்தமாகிப் பின்னர் நிகழ்தலின், அது வழிகிலைக் காட்சி எனப்படும்.

2. 'அறிவு உடம்படுத்தற்கு காட்டம் இரண்டும் கூட்டி உரை க்கும்’ எனவும்,

'குறிப்புரையும் காட்டம் இரண்டும் ஆகும்' எனவும் இரு தொடராக இயைத்துப் பொருள் கூறப்பட்டது. இவற்றுள், முதல் தொடர் தலைவனது காட்டத்தின் செய. லையும், இரண்டாக் தொடர் தலைமகளது காட்டத்தின் செயலையும் குறித்தன . காட்டம் இரண்டும் என்ற தொடர் தலைவன் தலைவி என்னும் இரண்டிடத்தும் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது.

அறிவு உடம்படுத்தலாவது, தலைவனது அறிவாலே தலைவியைக் கூட்டத் . திற்கு உடன்படச் செய்தல்; 'தலைவன் தன்னுடைய கோக்கம் இரண்டானும் கூட்டி வார்த்தை சொல்லும்; அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கையைப் புலப்படுத்திக் கூறுங் குறிப்புரையும் தன்னுடைய நோக்கம் இரண்டினாலுமே ஆம்' என்பது இந்நூற்பாவுக்கு கச்சினார்க்கினியர் கூறும் பொருளாகும். குறிப்புரையும் என வ.ம்மை விரித்துப் பொருள் கூறப்பட்டது.

காதலர் இருவருள் ஒருவரது கோக்கு மற்றவரது கோக்கினை ஊன்றி கோக்கு தலின் அவ் விருவர் கோக்கினையும் காட்டம் என்ற சொல்லாற் குறித்தார் ஆசிரியர் : காட்டம்-நாட்டுதல்; ஊன்றுதல்.