பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா சு # బ్రొ

"அங்கவை'யும் பாடம. பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையுமெடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. அம் மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் ஈண் டுக் கூறியுணர்க. - - • , ,

உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க. (#)

ஆய்வுரை

இது, மேற்குறித்தவாறு காதலர் இருவருள் ஒருவர் குறிப்பினை மற்றவர் குறிப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் நிகழ்வதே அன்பின் ஐந்திணைக் களவொழுக்கமாம் என்பது உணர்த்துகின்றது. (இ-ஸ்.) ஒருவரது கண்ணின் குறிப்பு மற்றவரது கண்ணினாற் குறிக்கப்பட்ட உள்ளக் குறிப்பினை உள்ளவாறு ஏற்றுணரவல்லதாயின் பின் கூறப்படுவன நிகழும் என்று கூறுவர் உள நூலாசிரியர்

எ - று.

"ஆங்கவை’ என்றது, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகப் பின்னர்க் கூறப்படும் உணர்வு நிலைக்ளை. 意} 。 பெருமையும் உரனும் ஆடுஉ மேன. இளம்பூரணம்

என் - எனின், இது தலைமகற்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) பெருமை யாவது-பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது-அறிவு. - -

1. இந்நூற்பாவில் வரும் அவை என்னும் சுட்டு, கண்ணினால் வரும்

குறிப்புரையினைச் சுட்டியதெனக் கொண்டார் இளம்பூரணர். அவை என்பது "புகுமுகம் புரிதல் முதலாக இருகையுமெடுத்தல் ஈறாகப் பின்னர் மெய்ப் பாட்டியலிற் கூறப்படும் மெய்ப்பாடு பன்னிரண்டனுள் பொறிதுதல் வியர்த்தல் முதலிய பதினொன்றினையும் சுட்டியதெனக் கொண்டார் கச்சினார்க்கினியர். இளம்பூரணர் கூறும் கண்ணினால் வரும் குறிப்புரை மேலைச் சூத்திரத்தில் "நாட்ட மிரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை” என விளக்கப் பெற்றமையின் அதனையே இச் சூத்திரமும் சுட்டியதெனக் கொள்ளுதல் கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படுமாதலானும், இடம் வரை யாது நூற்பாவில் வரும் அவை' என்னும் சுட்டு, அதன் அணித்தாக முன்னோ பின்னே வுள்ளவற்றைச் சுட்டுவ தன் றி இவ்வியலின் மூன்றாம் இயலாகிய மெய்ப்பாட்டியலில் விரித்துரைக்கப்படும் பன்னிரண்டு மெய்ப்பாடுகளுள் பதினொன்றினை மட்டும் வரைந்து சுட்டுதல் இயலாதாதலானும் உரையாசிரியர்கள் இரு வரும் கூறும் உரைகள் தொல்காப்பி

யனார் கருத்தினைப் புலப்படுத்துவனவாக அமையவில்லை.