பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இவை யிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு. '

இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது, வரைந்து எய்தும் என்பது பெறுதும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு' (குறள். ச.உ.உ) என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள் :"வேயெனத் திரண்டதோள்’ (கலித். இஎ} உறுகழி மருங்கின்' (அகம். உகல்) இவை உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு உரைத்தன. (s)

நச்சினார்க்கினியம்

இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி இனி உள்ளப்புணர்ச்சியே நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்பது உம் இவ்விருவகைப் புணர்ச்சிப் பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிதில் நிகழ்தலுண்டென்பது உம் உணர்த்துகின்றது.

(இ-ள்.) பெருமையும் அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும்; உரனும் . கடைப்பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும்; ஆடூஉ மேன.தலைவன் கண்ண (எ-று).

இதனாலே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக்கும் மெய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது வரைந்துகோடலும் உள்ளஞ் சென்றுழியெல்லாம் நெகிழ்ந்தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும் மெலிந்த உள்ளத்தானாயுந் தோன். றாமன் மறைத்தலுந் தீவினையாற்றிய பகுதியிற்சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரியவென்று கொள்க.

1. அஞ்சுவதஞ்சுதலாகிய பெருமையும் மனத்தைச் சென்றவிடத்தாற் செல்ல விடாது கன்றின் பாற் செலுத்தும் நல்லறிவும் ஆகிய இவையிரண்டும் ஆண்மகனுக் குரிய சிறப்பியல்பாகும்.

2. இத்துணையும் கூறப்பட்டன உள்ளப்புணர்ச்சிக்கே புரிய வாய் மெய்யுறு புணர்ச்சிக்கு நிமித்தமா வனவேயன்றி மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.