பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இளம்பூரணம்

என்-எனின், இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. . (இ-ள். அச்சமும் நானும் பேதைமையும் இம்மூன்றும் நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு.

எனவே, வேட்கையுற்றுழியும் அச்சத்தானாதல் நாணானாதல் மடத்தானாதல் புணர்ச்சிக்கு இசையாது நின்று வரைந்தெய்தல் வேண்டுமென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப்புணர்ச்சியால் நின்று வரைந்தெய்தி மெய்யுறும். இதற்குச் செய்யுள் :

தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிதம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம் பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை ஏனர் மடதல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற திலைமன்ற காண்என்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தல் தகைபெயத் தை இய கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ நீபெரிதும் மையலை மாதோ விடுகென்றேன். தையலாய் சொல்லிய வாறெல்லாம் மாறுமாறு யான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை நீ ஆயர் மகளிர் இயல்புரைத் தெந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்.' (கலித். ககக) இது தலைமகள் உள்ளப்புணர்ச்சியின் உரிமை பூண்டிருந்தவாறும். வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க.