பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் "تي ستلقي

தாகி நிலைபெறும் வேட்கை; ஒருதலை உள்ளுதல் - இடை விடாது ஒருவர் ஒருவரைச் சிந்தியா நிற்றல்; மெலிதல் - அங்ங்னம் உள்ளுதல் காரணத்தான் உடம்பு வாடுதல்; ஆக்கஞ் செப்பல் - யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்க மாக நெஞ்சிற்குக் கூறிக் கோடல்; நாணுவரையிறத்தல் - ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன்வரையிறத்தல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை, நோக்கிய நோக்கெல்லாந் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக்கோடல் , மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்; மயக்கம் - செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றோடு கூறல்; சாக்காடு - மடலேறுதலும் வரைபாய்தலும் போல்வன கூறல் என்று அச்சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத்தான முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்கமென்று கூறுப (எ - று).

இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைமையின் வேட்கை முற்கூறினார்.

சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும், இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பென்று கோடலும் போல்வன ஆக்கஞ்செப்பல். தலைவன் பாங்கற்குந் தோழிக்கும் உரைத்தலுந், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன நாணுவரை யிறத்தல். களவதிகார மாதலின் அவையென்னுஞ் சுட்டுக் களவை உணர்த்தும். கையுறைபுனைதலும் வேட்டைமேலிட்டுக் காட்டுத்திரிதலுந் தலைவற்கு மறத்தல் ; கிளியும் பந்தும் முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறத்தல். சாக்காடாவன :

'அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரெங் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.' (குறுந், சக)