பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா க சடு

'நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்'

பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல வண்டினஞ் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர மையின் மானினம் மருளப் பையென வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப

ஐயறி வகற்றுங் கையறு படரோடு அகலிரு வானம் அம்மஞ் சீனப் புகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத் துள்ளு தாவியிற் பைப் பய துணுகி, மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து இதுகொல் வாழி தோழி யென்னுயிர் விலங்குவெங் கடுவளி யெடுப்பத் துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே. (அகம்.எக)

இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவலெனக் கூறு தன் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடைய வெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் மரபினவையெனப் பன்மை கூறினார். (க)

ஆய்வுரை

இது, களவொழுக்கத்தில் காதலருள்ளத்தே நிகழும் உணர்வு நிலைகளை விரித்துரைக்கின்றது.

(இ-ள்.) ஒருவரையொருவர் தமக்குரியவராகப் பெறுதல் வேண்டும் என்னும் உறுதியான வேட்கையும், இடைவிடாது நினைத்

1. ஒரு தன்மை அல்லது உறுதி எனற பொருளில் இந்நூற்பாவில் வக்துள்ள "ஒருதலை’ என்பதனை ஒருதலை உள்ளுதல்’ எனப் பின்வரும் உள்ளு தற்கு அடையாக்கி, இடைவிடாது கினைத்தல்" எனப் பொருள் கொண்டார் இளம்பூரணர். இதனை இடைநிலை விளக்காகக் கொண்டு ஒருதலை வேட்கை’ என முன்னுற்ற வேட்கைக்கும் அடையாக்கி ‘இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்தாகி நிலை பெறும் வேட்கை எனப் பொருள் வரைந்தார் கச்சினார்க்கினியர்.