பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் ’ لیے ته

சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்’ என்னும் நற்றிணைப்பாட்டுள்,

'காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ

கடைமணி சிவந்ததின் கண்ணே கதவ அல்ல' (நற்றிணை-ங்க)

எனத் தன்னிலை யுரைத்தவாறு காண்க.

தெளிவு அகப்படுத்த லாவது-தலைவன் முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சியினை விழைந்து நின்றனாக, அப்புணர்ச்சியினைக் கூறுவார் முன்னம் ஒத்த பண் புடைமை உள்ளத்து இருவர் மாட்டும் வேண்டுதலின் தலைமகள் பண்பினைத் தலைவன் அறிந்து அத்தெளிவைத் தன்னகப்படுத்துத் தேர்தல். -

"யாயும் ஞாயும் யாரா கியரோ’’ என்னும் குறுந்தொகைப்பாட்டுள்,

"அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே’’ (குறுந்-சல்)

என இயற்கைப்புணர்ச்சி முன்னர்த் தலைவன் தலைவியர் உள்ளம் ஒத்த பண்பினைக் கூறியவாறு காண்க.

இதுகாறும் இயற்கைப்புணர்ச்சிக்குரிய திறன்கூறி, மேல் இயற்கைப் புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார். அஃதேல், தன்னிலை யுரைத்தலைத் தெளிவகப் படுத்தலுடன் இணைத்து மெய்யுறுபுணர்ச்சி யாக்கிய பின்னர்த் தோன்றுந் துறையாகப் படுத்தாலோ எனின் அது சான்றோர் வழக்கின்றாதலானும், மெய்யுறுபுணர்ச்சி முன்,

மெய்தொட்டுப் பயிறல்' (களவியல்-கத) முதலியன யாண்டும் நிகழ்ந்தே தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நிகழுமாதலானும் அஃதன்றென்க. (கல்)

நச்சினார்க்கினியம்

இஃது இன்பமும் இன்ப நிலையின்மையுமாகிய புணர்தல் பிரிதல் கூறிய முறையானே இயற்கைப் புணர்ச்சி முற்கூறி அதன்