பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கம் ఫ్రో

பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாய் அத்துறைப்படுவன வெல்லாந் தொகுத்துத் தலைவர்க்கு உரியவென்கிறது.

(இ - ள்.) முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு, நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல்; சொல்வழிப் படுத்தல் - அச் சொல்லாதவற்றைச் சொல்லுவனபோலக் கூறுதல்; நன்னயம் உரைத்தல் - அவை சொல்லுவனவாக அவற்றிற்குத்தன் கழிபெருங்காதல் கூறுவானாய்த் தன்னயப்புணர்த்துதல், நகைநனி உறாஅது அந்நிலை அறிதல் - தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக்கினமாகிய பிரிவுநிலைகூறி அவள் ஆற்றுந்தன்மை அறி

தல், மெலிவு விளக்குறுத்தல்-இப்பிரிவால் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனங்கொள்ளக் கூறுதலுந் தலைவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அதுதீரக் கூறுதலும்; தம் நிலை உரைத்தல் - நின்னொடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமதுநிலை உரைத்தல்; தெளிவு அகப்படுத்தல் - நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன், பிரியின் அறனல்லது செய்கேனாவலெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதல்; என்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் - என்று இக்கூறிய ஏழும் பயின்றுவரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு (எ -று). -

முற்கூறிய மூன்றும் நயப்பின்கூறு. இஃது அறிவழிந்து கூறாது தலைவி கேட்பது காரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகைபற்றிக் கூறுவது. நன்னயம்’ எனவே எவரினுந் தான் காதலனாக உணர்த்தும். இதன் பயன் புணர்ச்சியெய்தி நின்றாட்கு இவன் எவ்விடத்தான் கொல்லோ இன்னும் இது கூடுங்கொல்லோ இவன் அன்புடையன் கொல்லோ என நிகழும் ஐயநீங்குதல். இது பிரிதனிமித்தம். இவன் பிரியாவிடின் இவ்வொழுக்கம் புறத்தார்க்குப்

1. 'முன்னிலையாக்கல் முதலாக இங்குக் கூறப்பட்டவை இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்வன என்பது இளம்பூரணர் கருத்து. இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் பிரிதலும் பிரிதல் கிமித் தமுமாய் அத்துறைப்படுவன எல்லாக் தொகுத் துத் தலைவற்குரியனவாக இக் நூற்பாவில் கூறப்பட்டன என்பது கச்சினார்க் கினியர் கருத்து. இக்கருத்துக்கு ஏற்பச் சொற்களை கலிங் தும் வலிந்தும் இச் சூத்திரத். திற்கு கச்சினார்க் கினியர் எழுதிய உரை சூத்திரக் கிடக்கை முறைக்கு ஏற்புடைய தன்றாம். இந்நூற்பாவுக்கும் இளம்பூரணர் தரும் கருத்தும் பொருள் விளக்கமுமே தொல்காப்பியனார் கருத்தினை ப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளன,