பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டூஉ தொல்காப்பியம் - பொருளதி காரம்

யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே சொல்லும் ஆடும் மென்மெல வியலும் கனைக்கால் துணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே'

ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறியது. இதன்கண் ஆயத்துய்த்தமையும் பெற்றாம்.

இனி வேட்கை பொருதலை’ (தொல். பொ. 100) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சிமேல் நிகழ்த்துதற்கு அவத்தை கூறினாரென்றும் இச்சூத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சி புணருமென்றுங் கூறுவாரும் உளர். அவர் அறியார்; என்னை? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் ஆண்டுக் கூறிய மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறாம் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப் பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறுபுணர்ச்சிநடத்தல் பொருந்தாமையுணர்க.இனித் தலைவியை முன்னிலையாக்கன் முதலியன கூறிப் பின்னர்ப் புணருமெனின் முன்னர்க் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்’ (தொல்-பொ-96) எனக் கண்ணாற் கூறிக் கூடுமென்றலும் இருகையுமெடுத்தல்’ (தொல்-பொ-263) எனப் பின்பு கூறுதலும் பொருந்தாதாம்.

i

இங்ஙனம் கூறுபவர் இளம்பூரணர்.

இளம்பூரணர் கருத்தினை மறுத்தற்கு கச்சினார்க்கினியர் எடுத்துரைக்கும் காரணங்கள் பொருத்தமற்றன. வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் கூறப் பட்டவை களவொழுக்கத்திற்குச் சிறப்புடை மரபினவை எனத் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். அவத்தை என்பன நல்லூழின் ஆணையால் ஓரிடத்து எதிர்ப்பட்ட ஒத்த அன்பினராகிய ஒருவன் ஒருத்தி என்னும் இருவர்க்கும் பொதுப் பட கிகழும் உணர்வு கிலைகளாம். புணர்ச்சிக்குக் காரணமாய் கிகழும் அவ்வுணர்வு நிலைகளை இயற்கைப்புணர்ச்சிக்கண் முன்னர்க் கூறுதலே முறை, இங்குச் சொல்லப். பட்ட உணர்வு நிலைகளின் வெளிப்பாடே பின்னர் மெய்ப்பாட்டியலில் விரித்துரைக். கப்படும் அகனைக்திணை பற்றிய மெய்ப்பாடுகளாகும். வேட்கை முதற் சாக்காடி. நாகச் சொல்லப்பட்ட இவ்வுணர்வு கிலைகள் களவொழுக்கத்திற்குச் சிறந்தன என இங்குக் குறித்ததல்லது இவற்றுட் சாக்காடு என்னும் அவத்தை (கிலை) எய்திய பின்னரே மெய்யுறு புணர்ச்சி கடக்கும் என்பது வேட்கையொடுதலையுள்ளுதல்' என வரும் தொல்காப்பிய நூற்பாவிலோ அதற்கு இளம்பூரணர் வரைந்துள்ள

உரையிலோயாண்டும்கூறப்படவில்லை. இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்பட்ட காதலர் .