பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ

浣、

களவியல் - நூற்பா கம்

ஆய்வுரை

இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதோர் திறன் கூறுகின்றது.

(இ-ள்.) தனியிடத்தே தலைமகளை எதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் உரனும் நீங்க வேட்கை மீதுார்தலால் மெய்யுறு புணர்ச்சியை வேண்டினானாயினும் தலைமகள் பால் இயல்பாகத் தோன்றும் அச்சமும் நானும் மடனும் அதற்குத் தடைபாய் முந்துற்று நிற்பனவாதலின் அத்தடைகள் நீங்குதற்பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில் மொழிகளைக் கூறுதலும், தான் கூறும் அச்சொல்லின் வழி அவள் நிற்கும்படி சில சொற்கூறுதலும், அவளது நலத்தினை எடுத்துரைத்தலும், அதுகேட்ட தலைமகள் பால் நகைமிகுந்து தோன்றாது முறுவற் குறிப்புத் தோன்றிய அந்நிலையினைக் கூர்ந்து அறிதலும், தன் அகந்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன்னுள்ளத்து வேட்கை மீதுர்தலை நிலைப்படச் சொல்லுதலும், தலைமகளது உள்ளப் பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழும் என்பர் உளநூற் புலவர் எ-று.

நகை நனியுறா அந்நிலையாவது, நகை மிக்குத் தோன்றாது சிறிதே அரும்பித் தோன்றிய முறுவற் குறிப்பாகிய அந்நிலைமை.

இருவரும் தம் கண்ணினான் வரும் குறிப்பளவில் கின்று இன் முகமும் இன் சொல்லும் இன்றிப் பசுப்போல ஊமைகிலையிற் கூடினார் என்றல் மக்கள் து தலிய அகனைக். திணை யொழுகலாற்றுக்கு ஏற்புடையதன்றாம். எனவே இயற்கைப் புணர்ச்சிக்கண்

தலைவியை எதிர்ப்பட்ட தலைமகன் தலைவியை முன்னிலைய க்கல் சொல்வழிப் படுத்தல் முதலாகச் சில சொற்களைப் படிக i முறைமையான் நிகழ்த்தித் தலை. வியைக் கூடினான் என்றல் அவனது தலைமைக்கு ஏற்பு டயதேயாகும். இங்கனம் இயற்கைப் புணர்ச்சிக்கண் உள்ளப்புணர்ச்சி கிகழ்ந்து மெய்யுறு புணர்ச்சி கிகழ்வதற்கு முன் தலைவியின்பால் நிகழ்வதற்குரிய மெய்ப்பாடுகளையே புகுமுகம் புரிதல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாக மெய்ப்பாட்டியலில் ஆசிரியர் விரித். துரைக்கின்றார். தலைவன் கயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் நிகழ்த்திப் பிரிதல் இயற்கைப் புணர்ச்சியொடு தொடர்புடைய தாய் உடன் நிகழ்வது என்பது, "சொல்லிய நுகர்ச்சி வல்லேபெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகை.இப் போாச்சிறப்பின் இருகான்கு கிளவியும்" என அடுத்து வரும் நூற்பாவால் இனிது விளங்கும். எனவே இக் நூற்பாவுக்கு இளம் பூ. ர்ை கூறும் கருத்தும் விளக்கமுமே

தொல் காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையவாதல் கன்கு தெளியப்படும்.