பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு” (குறள். 1108) இது கூடுதலுறுதல், பிற வந்துழிக் காண்க.

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பது-இயற்கைப் புணர்ச்சிக்குக் களனாக மேற்கூறப்பட்டவற்றுடன் அவ்வின் பந் தி ைஎத்தலையும் விரைவாக ஒன்றாய்ப் பெற்ற விடத்து.

இத்தெய்வப் புணர்ச்சிக்குப் பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல், தழாஅல் கிளத்தல், இரங்கல், உறுதல், நுகர்ச்சி, தேற்றம் என்று சொல்லப்பட்ட இருநான்கு கிளவியும் என எண்ணப்படுத்துக. .

"மெய்தொட்டுப் பயிறல்' முதலாகக் "கூடுத லுறுதல்' வரை இயற்கைப் புணர்ச்சிக்கே உரிய கூறி,

"சொல்லிய நுகர்ச்சி' முதல் இருநான்கு கிளவி வரை இடந்தலைப்பாடும் சேர்த்து உணர்த்தினார். அற்றாயின் நுகர்ச்சியும் தேற்றமும் இயற்கைப் புணர்ச்சியன்றோ, இடந்தலைப்பாடாமாறு என்னை யெனின் நன்று கடாயினாய், மெய்யுறுபுணர்ச்சி. யினைப் பால் கூட்டும் நெறிவழிப்பட்டுப் பெற்றார்க்கு மெய்தொட்டுப் பயிறல் முதல் அறுதுறையே இன்றியமையாத் துறையாக, ஏனைய இரண்டும் இடந்தலைப்பாட்டிற்கும் சேர்ந்த துறையாகலின், பொதுப்பட இரண்ட்ற்கும் நடுவே வைத்துச் செப்பம் ஆக்கினா. ரென்க. நுகர்ச்சியும் தேற்றமும் எனப் பிரித்துக் கூட்டுக.

தீராத் தேற்ற மாவது - இயற்கைப்புணர்ச்சியுடன் முடியாத தெளிவு.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோன்' (குறள்.1005)

இஃது இயற்கைப் புணர்ச்சித் துறையன்று; இடந்தலைப்பாட்டின் கண் தலமைகன் கூறியது, நுகர்ச்சி பெற்றது.

'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள' (குறள்.1101)