பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கல் இள

என்பதோ எனின், இயற்கைப்புணர்ச்சிக்கண் நுகர்ச்சி யுற்றமை கூறிற்று என்க.

"எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் கனைமுதர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறிஅயர் கள்ந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை நேர் இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே.' (குறுந்.53) இஃது இயற்கைப்புணர்ச்சிப் பின்றைச் சொற்ற தீராத் தேற்ற வுரை. இன்னிசை யுருமொடு' என்னும் அகப்பாட்டுள், “நின்மார் படைதலின் இனிதா கின்றே தும்மில் புலம்பினும் உள்ளுதொறும் நலியும்’ (அகம்.85)

என்றது இடந்தலைப்பாட்டில் நேர்ந்த தேற்றம்,

“Guirirá சிறப்பின்' எட்டு என்றல். பேரும் சிறப்பினை ஆறு என்றலை எடுத்தோத்தாற் காட்டி நின்றது. இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும், மேல் * வாயில் பெட்பினும் என்னுமளவும் பாங்கற் கூட்டம்; மேல் தொடர்பவை தோழியிற் கூட்டம். .

பெற்றவழி மகிழ்ச்சியும் என்பது-இடந்தலைப்பாட்டினை யொட்டி நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெருமகிழ்வும்.

"நீங்கின் தெறுஉங் குறுகுங்கால் தண்ணென்னுந்

தீயாண்டுப் பெற்றான் இவள்” (குறள்.1104)

'ஒடுங்கி ரோதி ஒண்ணுதற் குறுமகள்

நறுந்தண் நீர ளாரணங் கினளே இனையள் ஆன்றவட் புனையளவு அறியேன் சிலமெல் லியவே கிளவி அனைடிெல் லியல்யா முயங்குங் காலே’’ (குறுந்.70)

இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுட்கள்.