பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

பிரிந்தவழிக் கலங்கலாவது-இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக் கலக்க முறுதலும் என்றவாறு.

' என்றும் இனிய ளாயினும் பிரிதல்

என்றும் இன்னாள் அன்றே நெஞ்சம் பணிமருந்து விளைக்கும் பரூஉ க்கண் இளமுலைப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே'

என வரும். -

இத்துணையும் இடந்தலைப்பாடு, பெற்றவழி மகிழ்தலும் பிரிந்தவழிக் கலங்கலும் பாங்கற் கூட்டத்தினுந் தோழியிற் கூட்டத்தினும் நிகழும். -

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்' என்பது-காம நுகர்ச்சி யொன்றனையும் நினையாது இவளாலே நமக்கு இல்லறம் இனிது நடக்குமென்று உட்கோடலும். நிற்பவை-இல்லறவினை.

தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள்

தீரா வெம்மையொடு திசைநடுக்கு உறுப்பினும் பெயராப் பெற்றியில் திரியாச் சீர்சால் குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு நலத்தில் திரியா நாட்டமும் உடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனின் இம் மண்திணி கிடக்கை மாநிலம் உண்டெனக் கருதி உணரலன் யானே'

இது நிற்பவை நினை இக் கழறியது.

"இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. (குறுந்.58) இது நிகழ்பவை உரைத்தது.

1. கிற்பவை கினை இ நிகழ்பளை யுரைப்பினும் என்பதனை நிற்பவை

தினை இயுரைத்தல், கிகழ்பவையுரைத் தல் என இரண்டாகப் பகுத்துரைப்பர் இளம் பூரணர்: