பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கல் டுக

குற்றங்காட்டிய வாயிலாவது-தலைவன் மாட்டுச் சோர்வானும் காதல் மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக்காட்டும்

பாங்கன்.

பெட்பினும்-அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால் வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்தவழி அதற் குடன்படல். அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத்தாள்? எத்தன்மையாள்? எனப் பாங்கன் வினாவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உருவுங் கூறுதலும், அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு அவள் நிலைமை கூறலு மெல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலைமகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச் செய்யுள் :

  • எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப

புலவர் தோழ கேளாய் அத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுதுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே”

. (குறுந்- 129)

"கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க

ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன்கயிற்று அதவத் தீங்கணி அன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே கொழுமிளைச் சீறுரர் சீறு ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத்தது வேபிறர் விடுத்தற் காகாது பிணித்தஎன் தெஞ்சே.’’

(நற்றினை. 65)

இன்னும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந்தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க.