பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

కి 2_ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள் :

அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு துங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீர் ஆயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய் புனங் காவலும் நுமதோ கோடேந் தல்குல் நீள்தோ ரீரே. ’’ (நற்றிணை.213)

பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. கெடுதி வினாயதற்குச் செய்யுள் : -

'நரை பரந்த சாந்தம் அறஎறிந்து நாளால்

உறையெதிர்ந்து வித்திய ஊழ் ஏணல்-பிறையெதிர்ந்த தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணிரோ ஏமரை போந்தன ஈண்டு. ’’ (திணைமாலை.1) 'இல்லுடைக் கிழமை யெம்மொடு புனரில்

தீதும் உண்டோ மாத ரீரே'

என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன.

தோழி குறை..இடனுமா ருண்டே என்பது-தோழி குறையைத் தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும், அமையாதிரப்பினும் மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தலிற் புல் லி ய வகையினும், அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கே டு ம் பீடும் கூறுதலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடல்மா கூறுதலும் உண்டு தலைமகன்கண் என்றவாறு.

தலைமகன்கண் என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. உம்மையாற் பிறகூறுதலு முண்டென்றவாறு. புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகன் இரத்தலுங் குறையுறுதலும் மடலேறுவல் எனக் கூறுதலும் பெறுமென்றவாறு ஈண்டு, குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல் என்பது தோழி கூற்றுள் அருமையி னகற்சி யென்று ஒதப்பட்டது. தண்டாதிரத்த லாவது-தலைமகன் பலகாலுஞ் சென்று இரத்தல்.