பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கக சுடு

றும், ஆயத்துள்ளே வருவான்கொல் என்னும் அச்சங் கூரவும் வாரான்கொல் என்னும் காதல்கூரவும்', புலையன் lம்பால்போன் மனங்கொள்ளா அனந்தருள்ளம்" உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல்லும் சென்று நின்றாளைத் தலைவன் இவ்வொழுக் கம் புறத்தார் இகழப் புலனாய் வேறுபட்டாள் கொல்லோ எனவும்: அங்ங்னம் மறைபுலப்படுதலின்’ இதனினுங்கு வரைந்து கொள்ளினன்றி இம் மறைக்கு உடம்படாளோவெனவுங் கருதுமாறு முன்பு போல் நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப்பறியுமென்றற்குத் தொடுமென்னாது பயிறலென்றார்." -

பொய் பாராட்டல் - அங்ங்னந் திண்டிநின்றுழித் தலைவி குறிப்பறிந்து அவளை ஓதியும் துதலும் நீவிப் பொய்செய்யா நின்று" புனைந்துரைத்தல் : -

சிதைவின்றேனுஞ் சிதைந்தனபோல் திருத்தலிற் பொய் யென்றார். २५

இடம்பெற்றுத் தழாஅல் - அவ்விரண்டனானுந் தலைவியை முகம்பெற்றவன் அவள் நோக்கிய நோக்கினைத் தன்னிடத்திலே சேர்த்துக்கொண்டு கூறல் : -

இடையூறு கிளத்தல் - அவள் பெருநாணினளாதலின் இங்ங்னங் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகச் சில நிகழ்த்தியவற்றைத் தலைவன் கூறல் :

- அவை கண்புதைத்தலுங் கொம்பானுங் கொடியானுஞ் சார்தலுமாம் :

நீடுநினைந்திரங்கல் - புணர்ச்சி நிகழாது பொழுது நீண்ட

தற்கு இரங்கி இரக்கந்தோன்றக் கூறல் :

1. தன் தோழியர் கூட்டத்துள் வருவானாயின் நம் களவு வெளிப்பட்டு விடுமே என்ற அச்சமும், வந்தால் அவனை மீண்டும் ஒருமுறை கண்டு மகிழலாமே என்ற காதலும் தலைமகள் உள்ளத்தே தோன்றும்.

அனக்தர் - மயக்கம். மறைபுலப்படுதல் , களவு வெளிப்படுதல். இதனினு உங்கு . இதற்குமேல். பயிறல் - பலமுறை தீண்டிப் பழகுதல். பொய்செய்யா கிற்றலாவது, விளையாட்டாக உரையாடி அளவளாவுதல்.

சிதைதல் . முன்னிருந்த ஒப்பனை கலைதல்.

.

. பொழுது மீண்டதற்கு இரங்குதலாவது, தலைமகனை அணையப்பெறாது காலம் வறிதே கழிந்தமைக்கு வருக்துதல்,