பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ: శ్రీ - தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கூடுதல் உறுதல் நீடித்ததென்று இரங்கினானென்பது அறிந் தோள் இவன் ஆற்றானாகி இறந்துபடுவனெனப் பெரு நானுக் கடிதுநீங்குதல் : . .

செல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுதி - தலைவன் தான் முற். கூறிய நுகர்ச்சியை விரையப் பெற்றவழி :

பெற்றவழி என்பதனைப் பெறுதலெனப் பெயர்ப்படுத்தல் அக்கருத்தாற் பெறுதும் : '

-- திராத் தேற்றம் a உளப்படத் தெகைஇ - எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணமாகிய சூளுறுதல் அகப்படத் தொகுத்து :

புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகாதென் றற்கு வல்லே பெற்றுழித் தீராத் தேற்ற மென்றார். முன் தெளிவகப்படுத்தபின் நிகழ்ந்த ஆற்றாமை தீர்தற்குத் தெய் வத்தொடு சார்த்திச் சூளுறுதலின் இத்தேற்றமும் வேண்டிற்று.

பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் - குறையாச் சிறப் பினவாகிய இவ்வெட்டும்

தாமே கூடும் இடந்தலைப்பாடும் பாங்கனாற் குறிதலைப் பெய் யும் இடந்தலைப்பாடும் ஒத்த சிறப்பினவாதற்குப் பேராச் சிறப்பி னென்றார்.

எனவே, இடந்தலைப்பாடு இரண்டாயிற்று. தோழியிற் கூட்டம்போலப் பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமை

1. கூடுதல் உறுதல் தலைவன் தன்ளைக் கூடுதற்கு இசையும் முறையில் தலைமகள் தனது காணம் நீங்கப் பெறுதல்,

2. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பதனைச் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல் எனப் பெயர்ப்படுத்தி எண்ணுதல் ஆசிரியர் கருத்து என்பதாம்

3. தீராத தேற்றம் தீராமைக்கு (விட்டு நீங்காமைக்கு) க் காரணமாகிய தேற்றம்; என்றது எக்காலத்தும் பிரியாமைக்குக் காரணமாகிய சூன் (சபதம்} செய்தல், இங்கனம் தெய்வத்தின் முன்னின்று குளுறுதல் முன்தேற்று எனப்படும்

4. முன் தெளிவகப்படுத்தபின்' என்றது. முன்னிலையாக்கல்' (களவியல் 10) என்ற சூத்தி த்தில் சொல்லப்பட்ட தெளிவகப்படுத்தல் நிகழ்ந்தபின் என்பதாம்.