பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கக ৫৫ rে

حسی

யிற் பாங்கற்கூட்டம் என்றதனைத் தலைமகன் பாங்கனைக் கூடுங்

கூட்டமென்று கொள்க. ' -

உ-ம் உறுதோ றுயிர் தளிர்ப்பத் திண்டலாம் பேதைக்கு

அமிழ்தி னியன்றன தோள்' (குறள்.11.06)

இது என் கை சென்றுறுத்தோறும் இன்னுயிர் தளிர்க் கும்படி யான் தீண்டப்படுதலினெனப் பொருள் கூறவே மெய் தீண்டலாயிற்று , -

"தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட

வில்லுடை வீளையர் கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த புன்கண் மடமா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்கண் - நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே” (குறுந். 272)

கழறிய பாங்கற்குக் கூறுந் தலைவன் இவனான் இக்குறை முடியாது, நெருநல் இடந்தலைப்பாட்டிற் கூடியாங்குக் கூடுவல், அது கூடுங்கொலென்று கூறுவான் அற்றைஞான்று மெய் தொட்டுப்பயின்றதே கூறினான். - - -

'சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழ நின்

திருமுகம் இறைஞ்சி நானுதி கதுமெனக் காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் புவிவிளை யாடிய புலவுதாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்ததின் கண்ணே கதவ அல்ல நண்ணார் அரண்டலை மதில ராகவு முரசுகொண்டு ஒம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர் கூட லன்ன நின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே.”

(நற்றிணை, 39)

1. 'பாங்கற் கூட்டம் என்பதற்குப் பாங்கனது உடன்பாடு பெற்றுத் தலைவன் தலைமகளைக் கூடும் கூட்டம் என விளக்கம் கூறுதலும் பொருந்தும்.