பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா சக

அறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேணடிகதன ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை நிறுத்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனி திரை தொகுத்து விளங்குமுத் துறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே’’

என்னுஞ் செய்யுள் இரவு வலியுற்றது.

ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்-தோழியை இரந்து பின்னிற்றலை வலித்த தலைவன்' தலைவியுந் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினுந், தோழி தனித்துழி யாயினும், தும்பதியும் பெயரும் யாவை யெனவும் ஈண்டு யான் கெடுத்தவை காட்டுமினெனவும், அனையன பிறவற்றையும் அகத் தெழுந்ததோர் இன்னிர்மை தோன்றும் இக்கூற்று வேறோர் கருத்து உடைத்தென அவள் கருதுமாற்றானும் அமையச் சொல்லித், தோழியைத் தன் குறையறிவிக்கும் கூறுபாடும் :

வினாவுவான் ஏதிலர்போல ஊரினை முன் வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின்வினாய் அவ் விரண்டினும் மாற்றம் பெறாதான் ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர் கண்டார் போலவும் கூறினான். இவன் எண்ணினாயதோர் குறையுடையனென்று அவள் கருதக் கூறுமென்பார் நிரம்ப'

1. இரந்து பின்னிற்பல்' என வலித்தலாவது, தலைமகனாகிய தான் பணிப்பெண்ணாகிய தோழியின் பின் சென்று இரக் து கி ஆறல் இழிவு எனத்தன் உள்ளம் தளராதவாறு யான் தோழியாகிய இவளை இரந்து பின்னின்று என து

குறையினை முடித்துக் கொள்வேன்' எனத் தலைமகன் தனது வேட்கைக்குத் துணை கிற்கும்படி தனது கெஞ்சினை வன்மையுடையதாக்கிக் கொள்ளுதல்;

'இன்மை யிடும்பை யிரக்து தீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்' (குறள், 1963)

என்றவாறு இரந்து தீர்வாம்' என்னும் வன்மையினையுடையனாதல்.

2. கிரம்ப அமைய, தனது கருத்து கிறைவேற.

3. குறையுறுதல் - தன் குறைபறிவித்தல்.