பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ శ్రీ: தொல்காப்பியம் - பொருளதிகாரம்

வென்றார். கெடுதியாவன, யானை புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன் அவை கண்டிரேர வெனவும் வினாவுவன பலவுமாம்.

பிறவு' மென்றதனால் வழிவினாதலுந்தேன்ன்ெர்டு அவரிடை உறவு தோன்றற்பாலனவுங் கூறுதலுங் கொள்க."

குறையறுஉம் பகுதி, குறையுறு பகுதி எனவுமாம்; எனவே குறையுறுவார் சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறை யோடு சேறலு ங் கொள்க. பகுதியென வரையாது கூறலில் தனித்துழிப் பகுதி முதலியனவும் இருவருமுள்வழி இவன் தலைப்பெய்தியுடையன் எனத் தோழி உணருமாறும் வினாவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலுமாம். முன்னுறவுணர்தல் நாற்றமுந் தோற்றமும்’ (தொல்.பொ.114) என்புழிக் கூறு மதியுடம்பாடு மூவகையவென மேற்கூறுப.

தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் - தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள்மேலே சேர்த்தி அதனை உண்மையென்று உணரத் தல்ைவன் கூறுதலும் :

"குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்

பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி கண் போன் மலர்தலு மரிதிவள் தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே.’’ (ஐங்குறு. 299)

இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே இவள்.கண்ணது இவன் வேட்கையென்று தோழி குறிப்பான் உணரக் கூறியது.

குன்றநாடன், முருகன் , அவள் தந்தையுமாம்.

இது முதலியவற்றைத் தலைவன் கூற்றாகவே கூறாது தோழி கூறினாளாகக் கூறி அவ்விடத்துத் தலைவன் மடன்மா கூறுமென்று

1. கெடுதியா வன தனககுரியவாகும் கிலைமைக்கண் தன்னை விட்டுத் தவறிய பொருள்கள்.

2. மெய்புற மெய்யெண் து உணர. கூறல் - தலைவன் கூறல், அவள் என்றது தலைவியை .