பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா சக இன்க்

மரக்கிளைகளையும் கொடிகளையும் தனக்குச் சார்பாகக் கொண்டு மறைந்து ஒல்கி நின்றாளாக, அதுகண்ட தலைமகன்) தனது ஊற்றின்பத்திற்கு இடையூறாக நின்ற தடைகளை எடுத்துரைத்தலும், தலைமகளை மெய்யுறுதற்குரிய காலம் வாய்க்காமையை எண்ணி வருந்துதலும், பின்னர் மெய்யுறுத்லும், மேற்கூறியவற்றுடன் இன்ப துகர்ச்சியினையும் விரைவாகப் பெற்றவிடத்து, "நின்னைப் பிரியேன்” எனத் தலைவிக்குத் தான் பிரியாமைக்கு ஏதுவாகிய தெளி வுரை பகர்தலும் ஆகிய நிலைபெயராச் சிறப்பினவர்கிய எட்டுவகைக் கூற்றும், முன் கூட்டம் பெற்ற இடத்தினையே மீண்டுந் தலைப்பட்டுக் கூடி மகிழ்தலும், தலைமகளைப் பிரிந்தவழிக் கலக்கமுறுதலும், என்றும் நிலைநிற்பனவாகிய இல்லறப் பண்புகளை நினைந்து மேல் நிகழ்வனவற்றை எடுத்துரைக்குமிடத்தும், தன்பால் சோர்வு மிகுதியாலும் காதல் மிகுதியாலும் நேரும் குற்றங்களை எடுத்துக் காட்டி இடித்துரைக்கும் உயிர்த்தோழனாகிய பாங்கன் தனது கள. வொழுக்கத்தை ஏற்று உடன்பட்ட இடத்தும், தலைமகளால் விரும்பப்பட்ட உயிர்த்தோழியை வாயிலாகப்பெற்று அவளை இரந்து பின்னின்று அவள் கூட்டக் கூடுவேன் எனக் கருதி அங்ங்னம் இரத். தலை மேற்கொள்ளுமிடத்தும், ஊரும் பேரும் தான் இழந்தனவும் பிறவும் ஆகியவற்றை வினவுமுகத்தால் தன் மனக்கருத்துப் புதுக்கலத்துப் பெய்த நீர் புறம் பொசியுமாறுபோன்று குறிப்பிற் புலனாகத் தோழியைக் குறையிரந்து நிற்கும் பகுதியும், தோழி இவன் கூறு. கின்ற குறை தலைவியைக் குறித்ததாக இருந்ததென்று அவள்பாற் சார்த்தி எண்ணும் நிலையிற் சில கூறுதலும், தடைபடாது பல. முறையுஞ் சென்று இரத்தலும், மற்றைய வழியும் தலைவன் வருந்திக் கூறுகின்ற சொல்லினைத் தலைவியொடு சார்த்திக் கூறுதலின் முன்னுறுபுணர்ச்சி முறையே யடைகவெனவும் தலைவி பேதைத் தன்மையள் எனவும், இவ்வாறு ஒழுகுதலாற் கேடு உண்டாகும் எனவும், இவ்வொழுக்கம் நின்பெருமைக்கு ஏலாது எனவும் கூறித் தோழி தலைவனை அவ்விடத்தினின்றும் அஞ்சி நீங்குதலாலுளதாய வருத்த நிலைமையும் நோக்கி மடலேறுவேன் எனக் கூறும் இடமும் தலைவனுக்கு உண்டு எ-று.

ல்உ. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்

அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே.