பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்

பொருளதிகாரம்

ଅଞ୍ଜ ଚଣ୍ଡୀ’ ଗଛନ୍ତି !!! ! ଟଁ

இளம்பூரணம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் களவியல் என்னும் பெயர்த்து. களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்றபெயர். அஃதாதல் ஈண்டு உரைக்கின்றதனால் பயன் இன்றாம்; களவென்பது அறம் அன்மையின் (எனில் , அற்றன்று, களவு என்னும் சொற்க ண் டு N ெய ல் ல ம் அறப்பாற்படாதென்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல். இன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாம னிற்றலால் இஃது அறமெனப்படும். அன்னதாதல் இச்சூத்திரத்தானும் விளங்கும்.

அஃதற்றாக, மேலை ஒத்தினோடு இவ்வோத்திற்கு இயைபு என்னையெனின், மேல் கைக்கிளை முதற் பெருந்தினை இறுவா யாக எழுதினை ஓதி, அவற்றின் புறத்து நிகழுந் திணைகளும்

1. இது களவொழுக்கம் உணர்த்தினமையால் களவியல் என்னும் பெயர்த். தாயிற்று.

2. களவென்பது அறம் அன்மையின் கண்டு உரைக்கின்றதனால் பயன் இன். றாம் எனில் என இயைத் துப் பொருள் காண்க.

3. களவெனும் சொற்கேட்டுக் களவு தீதென்பது உம், காமம் என்னும் சொற்கேட்டுக் காமம் தீதென்பது உம் அன்று; மற்றவை கல்லவா மாறும் உண்டு: என வரும் இறையனார் களவியலுரையினை அடியொற்றியமைந்தது இவ்வுரைப் பகுதியாகும். - 4. இன்னதன்றி எ ன் பதனை , இஃது அன் தன் எனத் திருத்துக. 5. அறநிலை வழாமன்றலால்' என்பது முன்பதிப்பிலுள்ள பாடம்; அறநிலை வழாமனிற்றலால்' என இங்குத் திருத்தப் பெற்றது.