பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கடி ♔.

கல்லுயர் நீண்ணி யதுவே திெல்லி மரையினம் ஆரும் முன்திற் புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே”

(குறுந். 235)

இக் குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடத்துச் சேறுவான் கூறியது.

தச்சினார்க்கினியம்

இதுவும் இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. - (க.உ}

(இ - ள்.) பண்பிற் பெயர்ப்பினும்' - தோழி தலைவியது இளமை முதலிய பண்புகூறி அவ் வேட்கையை மீட்பினும்:

உ-ம்: “குன்றக் குறவன் காதன் மடமகள்

வண்டுபடு கூந்தல் தண்டழ்ைச் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே”

- (ஐங்குறு.256) இஃது இளையளெனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது.

பரிவுற்று மெலியினும் இருவகைக் குறியிடத்துந் தலைவியை எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படாநின்ற ஞான்றும் பலவாயவழி அவன் பரிந்த உள்ளத்தனாய் மெலியினும்:

இன்னும் பரிவுற்று மெலியினும்' என்றதனானே புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது உறுவனவும், வறும்புனங்கண்டு கூறு வனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறுவனவும், தோழி இற்புணர்ச்சிக்கண்' தன்னிலைக் கொளி இக் கூறுவனவும், இரவுக் குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறு வனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அமைக்க.

1. பெயர்த்தல் - மீட்டல்.

2. பரிவுற்றுமெலிதல் - பரிவுடைய உள்ளத்தனாய் மெலிதல்.

8. தோழியிற்புணர்ச்சிக்கண்' என்ற தொடரை ச் சேர்க்க