பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் عی ہی

"மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்

பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர்-குயில்பயிலும்

கண்ணி யிளஞாழல் பூம்பொழில் நோக்கிய

கண்ணின் வருந்துமென் னெஞ்சு' (திணை ஐம்.49) என வரும்.

அன்பு உற்று நகினும் - தோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்: உ-ம்: நயனின் மையிற் பயனிது வென்னாது

பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு tங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகா அது...'

(நற்றிணை, 75) இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது. அவட்பெற்று மலியினும்-தோழி உடம்பாடு பெற்று மனம் மகிழினும்: - - - -

இன்னும் அவட்பெற்று மலியினும் என்றதற்கு, இரட்டுற மொழிதலென்றதனாற், றலைவியைப் பகற்குறியினும் இரவுக் குறியினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க." 'நன்றே செய்த வுதவி நன்று தெரிந்து

யாமென் செய்குவ நெஞ்சே காமர் மெல்லியல் கொடிச்சி காப்பப் பல்குரல் ஏனற் பாத்தருங் கிளியே, ’’ - -

(ஐங்குறு. 288) இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கண்கட் படி கி ன் ற தென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன் அவ்ளைப் பெற்றேமென மகிழ்ந்து கூறியது.

"காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ணொவ்வே மென்று."

(குறள். 1144) இஃது இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது.

1. அன்புற்று ககுதலாவது, அவன்பால் உள்ள அன்பு புலப்பட நகைத்தல்.

2. அவட் பெற்று - அவளது (தோழியது) உடன்பாட்டினைப் பெற்று;

3. இனி, அவள் என்றது தலைவியை எனக் கொண்டு, தலைவியைப் பகற்குறியினும் இரவுக் குறியினும் பெற்ற என இரட்டுற மொழிதலாகக் கொள்வர்.