பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

"கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி

கொன்றை யொள் வீ தாஅய்ச் செல்வர் பொன்செய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே...' (குறுந். 238)

அவ் வினைக்கு இயல்பே.அத்தோழியிற் கூட்டத்திடத்துத்

தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம் என்றவாறு (12) :

ஆய்வுரை

இது, தோழியிற் கூட்டத்தின் தலைமகனுக்குரியதோர் இயல்புணர்த்து நின்றது. . - - -

(இ-ள்.) தலைமகளது இளமைப்பண்பினைத் தோழி எடுத்துக் கூறித் தலைவனை அவ்விடத்திருந்து பெயர்த்த வழியும், வருத்தத்தினால் மெலிகின்றமை கூறியவிடத்தும், தலைமகன்து குறையை மறுக்குந்தோழி அன்பு தோன்ற நகைத்த நிலையிலும், அவளது உடன்பாட்டினைப் பெற்று மகிழுமிடத்தும், தான் செல்லும் வழி. யிடை இடையூறுண்டாமிடத்தும் தோழியிற் கூட்டமாகிய அவ்வினைக்கண் (தலைவன் கூற்று நிகழ்தல்) இயல்பாம் எ-று.

கெட. பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப.

இளம்பூரணம்

என்-எனின், பலவகை மணத்திற் பாங்கராயினார் துணையாகுமிடம் இத்துணையென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று.

பாங்கராயினார் துணையாகக் கூடும் கூட்டம் பன்னிரண்டு வகையென்றவாறு. -

நிமித்தம் என்பது நிமித்தமாகக் கூடும் கூட்டம். அக்கூட்டம் நிமித்தமென ஆகுபெயராய் நின்றது. பாங்கராற் கூட்டம் பாங்கர் நிமித்தமென வேற்றுமைத் தொகையாயிற்று. அவையாவன:பிரமம் முதலிய நான்கும், கந்திருவப் பகுதியாகிய களவும், உடன்

1. అమణ పో க்கு இயல்பு - அவ்விணைக்கண் (தலைவன் கூற்று நிகழ்தல்)

இயல்பு என உருபு மயக்கமாகக் கொண்டு உரை வரையப்பட்டது.