பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி 81 பெறுதல் வேண்டும். தன்னிடம் அடிக்கடி வரவிரும்பும் தலைவ்ன், தான் வதியும் சூழ்நிலையை கன்கு அறிய வேண்டுமாதலானும், களவொழுக்கம், புறத்தார் அறியாது நிலைபெற்று நிகழ்தல் வேண்டும்ாதலானும், தன் தோழியை இன்னாளெனத் தலைவனுக்கு அறிவித்தல் தலைவியினுடையது. துணை சுட்டுக் கிளவி கிழவிய தாகும் என்பர் ஆசிரியர். - தலைவன் பிரிதல் : மெய்யுறு புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவன் தன் அன்பு புலப்பட தலைவியைப் புகழ்ந்து கூறி, ..இனி இவளுடன் காலம் நீட்டிப்பின் ஏதமாம்" என்று கருதி, அவளை விட்டுப் பிரிய நினைப்பான். அவ்வாறு கினைப்பவன், வண்டு, கெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கி, அவற்றிற்குத் தன் கழிபெருங்காதலைக் கூறுவான். எடுத்துக்காட்டாக, மணிவண்டு : இம்மாதர் கோதை மதுவுன வந்த போழ்து அங்க இணை வண்டிங் கிறந்து பாடின் றிருக்குமே இரங்க லின்றாய்த் துணைவண்டு துஞ்சின் யுேம் துஞ்சுவை யென்று நின்கண் பணிகொண்ட தின்மை யாற்றான் பரிவொடும் இருக்கு மன்றே.38 என்ற பாடலை இதறகு எடுத்துககாட்டாகக் கொள்ளலாம். கேம்சரியை மணந்த சீவகன், இரண்டு திங்கள் அவளுடன் இன்பத் துறையில் எளியனாய் இனிதிருந்து, அவளை விட்டு நீங்கிச் செல்லக் கருதியவன், அவளிடம் வெளிப்படக் கூறாது, வண்டிற்குக் கூறுவான் பேர்லத் தன் பிரிவுக் குறிப்பை உணர்த்துவதைப் பாடலில் காண்க. தலைவி பிரிதற்குறிப்பை அறிந்து கவலுவாள். உடன்ே, தலைவன் நின்னொடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதொன்றாதலின், கின்ன்ன்ப் பிரியேன் பிரியின் ஆற்றேன், அன்றி, அறனல்லது செய்தேனும்ாவேன்" என்று. கூறித் தேற்றுவான். எனினும், தலைவி பிரிவிற்குக் கலங்கி, கார் மருங்கின் மின்னுப் போலவும், நீர் மருங்கிற் கொடி போல. வும், தளிரும் முறியும் ததைந்து, குளிரும் களிரும் கவினி எழா நின்றதோர் கவின்பெறு காரிகை, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவி போலக் காண ஒளி மழுங்கிக் கனல் முன் இட்ட 32, களவியல்-நூற்பா 33 (இளம்) 33. சீவக சிங் தா-செய். 1502 தொல்.-3