பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி 83 என்பனவற்றுள் ஒன்று சொல்லாது, காமப்புணர்ச்சியென்றே கூறிய காரணம் என்னையெனின், இவற்றுள் ஒன்றே சொல்லும் ஒக்கும் அல்லது. அவை எல்லாம் அன்பினானே கிகழுமாகலின் காமப்புணர்ச்சியென்றார் என்பது பல காரணத்தினrய பொருளை ஒரு காரணத்திற் சொல்லுவது சிறப்புடைமை கோக்கி, என்னை : லேனும் ருேம் காலமும் வித்தும் என இவற்றினது கூட்டத்தினாய மூளையை கெல் முளை என்ப. கெல் முளைக்கு நெல் சிறப்புடைக் காரணம்.கிலனும் கிரும் முதலாகவுடையன பொதுக்காரணம். அவை பயற்று முளை முதலாவுடையனவற்றிற்குங் காரணமாகலான், அது போல, ஈண்டும் தெய்வமும் இயற்கையும் முன்னு:றவும் பொதுக் காரணம், காமம்,சிறப்புக் காரணம், ஆகலான், காமப்புணர்ச்சி எனப் பட்டது. திருக்கோவையாரின் உரையாசிரியரும் இங்ஙனமே கூறு வர். இதனை அடுத்து நிகழும் இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற்கூட்டம் முன்னரே ஒருவாறு விளக்கப்பெற்றதை ஈண்டு நினைவு கூர்க, பேரின்பக்கருத்து மேற்கூறப்பெற்ற காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல், கூடல் விருப்பம் என்ற துறைகளுக்குப் பேரின்பக் கருத்து உரைப்பதும் உண்டு, அங்ங்னம் உசைப்பார் காட்சியை அருட்குருவாய் வரும் இறைவன் திருமேனியைக் காண்டல் என்பர் : காடகியின் புதுமையால் இறைவன் திருமேனியேயென்று தெளிதல் தெளிவு எனப்படும்; திருமேனியால் பயன் பெறலாம் என்றும், அவனிடத்தில் கருணையுண்டென்றும் அறிதல் குறிப்பறிதலின் பாற்படும். அருள் பெற விரும்புதலைப் புணர்ச்சி விருப்பம் என்று கூறுவர். மணிவாசகப்பெருமான் திருப்பெருக் துறையில் இறை வனைக் கண்டு, ஐயுற்றுத் தெளிக் து, அருள் பெற்றமை, கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவலொன யானும் தேறினன் காண்க அவனெனை பாட்கொண் டருளினன் காண்க வி என்ற பாடற்பகுதியால் விளங்கும். இனி, மேற்குறிப்பிட்ட இடத்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் முதலியவற்றை அடுத்துக் காண்போம், 37. இறை-களவியல்-நூற்பா 2-ன் உரை பக். (37-38) 38. திருக்கோவை.செப். 18-இன் உரை. 39. திருவாசகம் : திருவண்டப்பகுதி - அடி (60-63)