பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற்கூட்ட மரபுகள் 85 என்று கூறிக்கொள்ளுதலே ஆக்கம் செப்பல், தலைவனும் தலைவி பும் தன் பாங்கனுக்கும் தோழிக்கும் தங்கள் ஒழுக்கத்தைக் கூறித் துணை செய்யுமாறு வேண்டுதலே காணத்தைக் கடத்தல்; தலைவன் வேட்டை மேலிட்டுக் காட்டில் திரியாதிருத்தலும், தலைவியும் கிளி, பந்து முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்த்தலும் விளையாட்டு மறத்தல்; தலைவன் மலைபாய்வேன்’ என்பது முதலாகக் கூறுதலும், தலைவி, இப்பிறப்பையொழித்து மறுபிறப்பிலாயினும் என் கணவனையடைவேன், என்று கூறு தலும் சாக்காடு. - இடத்தலைப்பாடு இடம் தலைப்பாடு என்பது, அதே இடத்தில் மறுநாளும் இருவரும் எதிர்ப்படுதல். தலைப்பாடுதலைப்படுதல்-கூடுதல். தலைவனும் தலைவியும் வினையினால் தலைப்படுதலால், இங்கனம் கூடுவது இடந்தலைப்பாடு எனப் படும். இஃது இரண்டொரு நாள் கழித்து நடைபெறினும் மறுகாளே கடப்பதாகக் கூறுதல் புலனெறி வழக்கமாகும். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து இருவரும் பிரிந்த பின்னர், அப்பிரிவாற்றாது வருக்தி கின்ற தலைமகன் தலைவியை மறுகாளுங்கூட எண்ணி, யோன் இவளை எய்தியது விதியானே: இன்னும் அவ்விதி கைதரு மேல காண்பல்” என்று தன் தோழனுக்குக் கூறாது முன்னை நாளில் அவளைக் கண்ணுற்ற பொழிலில் புகுவான். தலைவியும் பிற்றை ஞான்று தன் ஆய வெள்ளத்தோடும் வந்து, தான் நெருகல் விளையாடின இடத்தைக் குறுகி, ‘நேற்று கின்னிற் பிரியேன்: பிரியின் ஆற்றேன் என்று சொல்லிச் சென்றவன் அறியாது. இவ்வாயத்துள்ளே வருவான் கொல்லோ’ என்னும் பெருகாணி னாலும், கம் பிரிவு ஆற்றாமையால் இறந்துபட்டான் கொல்லோ" என்ற அச்சத்தினாலும் மீதுாரப்பட்டுத் தன் தன்மையளன்றி கிற்பாள். ஆயங்களும் முன்னை காளில் பிரிந்தாற்போன்று, தழிை விழை தக்கன தொடுத்தும் என்றும், கண்ணி தண்ணறு காற்றத்தன. செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும் என்றும், இவ்வாறு விளையாட்டு விருப்பினாற் பிரியும்." இந்நிலையில் தலைமகன் தலைமகள் தனிமையாக கிற்கும் இடத்தை கோக்கிச் சென்று: தலைழகளை எதிர்ப்படுவான். தலைவியும், “இவன் கம்பால் அன்பில்னோ? என்று முன்பு நிகழ்ந்த ஐயம் நீங்கிப் பெரியதொரு மகிழ்ச்சி பெறுவான். ஆயினும், தன் இயற்கைக் குணங்களாகிய காண் முதலியன அம்மகிழ்ச்சிக் குறிப்பை வெளிப்படுத்தா வகையில் தடுத்து கிற்கும். உடனே தலைவன், "இக்களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாக, அதனால் இங்ங்ணம் வேறுபட்டாளோ?? என்றும், அன்றி, களவு வெளிப்புடுதலால் இனி மணம் சேய்து கொள்ளின் அல்லது, இக்கூட்டத்திறகு உடம்படாள் கொல்லோ"