பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடுபுள் உடையானே! கோலக் கணிவாய்ப் பெருமானே! செடிஆர் வினைகள் தீர்மருந்தே! திருவேங் கடத்துனம் பெருமானே! நொடிஆர் பொழுதும் உன்பாதம் கான நோலாது ஆற்றேனே." -கம்மாழ்வார் மேனாட்டு வரலாற்றைப் படித்தோர் ரிஒேரன்ஸ்’ {Renaissance) என்ற ஒரு திட்டமான காலவரையறையை நன்கு அறிவர். நடுக்காலத்திற்குப் பின்-ஆனால், நவீன காலத்திற்கு முன்-உள்ள ஒரு காலப் பகுதியே இக்காலவரையறையில் அடங்கும். அஃதாவது, பதினான்காவது நூற்றாண்டின் கடுப் பகுதியிலிருந்து பதினேழாவது நூற்றாண்டின் நடுப்பகுதிவரைமூன்று நூற்றாண்டுகள்-அடங்கிய காலப் பகுதியாகும் இது. இக்காலப் பகுதியில்தான் மேனாட்டில் இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல் முதலிய துறைகளில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது; அத்துறைகள் யாவும் வானுற ஓங்கி வளர்த்தன. ஒரு புதிய யுகம் தோன்றியது போன்ற மாறுதல் எம்மருங்கும் காணப்பெற்றது. இதைத்தான் மேனாட்டு அறிஞர்கள் "ரிகேசான்ஸ்’ என்று கூறுவர். இந்த ஃபிரெஞ்சுச் சொல்லின் பொருள் மறு பிறப்பு (Re-birth) என்பது. தமிழில் நாம் இதனை மறுமலர்ச்சி என்று வழங்கலாம். மேனாட்டில் இம்மறுமலர்ச்சி ஏற்படுதற்கு முன்னிருந்த சூழ்நிலையைச் சிறிது கோக்குவோம். நடுக்காலத்தில் சில நூற்றாண்டுகளாக ஐரோப்பியர் வாழ்வு இருள் அடைந்து கிடந்தது. சமயவாதிகளின் கருத்து வேறுபாடுகளும் வாதப்போர் களும் மக்களைக் கொடுமையாய் ஆண்டுவந்தன. எல்லாவற்றை யும், மக்கள் சமயக் கோட்பாடுகளை அளவுகோலாகக்கொண்டுதான் அளந்தனர். சமய சாத்திரங்கட்கு விரிவுரைகளும், விரிவுரைகட்கு மேலும் விரிவுரைகளும் மறுப்புகளும் மறுப்புகளுக்கு மேலும் மறுப்புகளும் எழுதுவதிலேயே அறிஞர்கள் காலத்தைக் கழித்தனர். 1. திருவாய். - 6.10:7