பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற்கூட்ட மரபுகள் - 9 : மேலும், இடங்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்ற இரண்டு பகுதிகளுடன் ஏதேனும் ஒன்று மட்டிலுமே தலைவனுக்கு கிகழுமாதலின், இ வ. ற் று ன் எது முன்னர் நிகழ்வது, எது பின்னர் கிகழ்வது என்னும் ஐயப்பாடு எழுவதற்கே இனிச் சிறிதும் இடமே இல்லை என்பதையும் காம் கருத்தில் இருத்த வேண்டும். - பாங்கனொடு கூடுதல் மேற்கூறியவாறு இடந்தலைப்பட்டுத் தானே தலைமகளைக் கூடி ஆற்றுவித்து நீங்கிய தலைமகன், “நின்னிற்பீரியேன்” என்று சூளுறுத்தப்பெற்றுப் பிரித்தான். *தன்னைக் காணாத என் நிலைமை நினைந்து ஆற்றாங்கொல்லோ" எனவும், ஆற்றாளாகி கின்றாள் தனது வேறுபாட்டைப் புறத்தார் அறியாமை மறைக்குமாறு அறியாது வருக்துங் கொல்லோ" எனவும், இவை முதலாயின. ைேனந்து ஆற்றாது கிற்பன். இக்கிலையில்: இயற்கைப்புணர்ச்சியின் இறுதியில் தலைவி தன்னைப் பிரிந்து தோழியரோடு சேர்ந்து அளவளாவிய பொழுது, அவளுக்குச் சிறந்தாளென்று தன்னாலறியப்பெற்ற உயிர்த்தோழி எதாவது துணை செப் வாளா என்று கினைத்துப் பார்ப்பான். பிறகு, "அத்தோழியானவள் அவட்கன்றே சிறந்த துணையாம், கமக்கு அங்ங்ணம் ஆகாதன்றே; ஆதலால், நாம் தலைவியை மீண்டுங் கூடுதற்கு நமக்குச் சிறந்த துணைவனாயுள்ள நாம் பாங்கனுக்கு இதுகாறும் கிகழ்ந்தவற்றையெல்லாம் எடுத்துக் கூறினால், பின்பு அவளைச் சென்று எப்திக் குறையில்லை’ என்று எண்ணித் தான் எண்ணியவற்றைத் தன் பாங்கனுக்குக் கூற விரும்பி அவனை கினைப்பான். இது திருக்கோவையாருள் பாங்கனை நினைதல்’ என்னும் துறையாக வைத்துப் பேசப்பெறும். தலைவியை கினைந்து ஆற்றாகிற்கும் தலைவனை எதிர்ப் பட்ட பாங்கன், அவனை அடியிற்கொண்டு முடிகாறும் நோக்கி, வளர் ஒளி இளஞாயிற்றின் வனப்புடைய திருவொளி மழுங்கும்படி, எம்பெருமாற்கு இன்று நேர்ந்த வாட்டம் என்னையோ ? என்று உசாவுவான். இதனை, சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப லத்துமென் சிங்தை புள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி ஏழிசைச்சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே." 12. திருக்கோவை - 20