பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற்கூட்ட மரபுகள் 93 ,ே இன்னவிடத்து இன்ன உருக்கண்டு என் உள்ளம் அழியப் போந்தேன் என்றல் கின் கற்பனைக்குப் போதாது” என்று கழறிபுரைப்பான். காதற்பாங்கன் இங்ங்ணம் கழறவும் கேளாது பின்னும் வேட்கை வயத்தனாய் கிற்கும் தலைவன், கண்ப, என்னாற்கானப்பட்ட வடிவை நீ கண்டிலை : கண்டனையாயின் இங்ங்ணம் கழறாய்” என்று மறுத்துரைத்து வருந்தாகிற்பர்ன். இதனை, பூணிற்பொலி கொங்கை யாவியை ஓவியப்பொற் கொழுந்தை காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினை ,ே14 என்ற திருக்கோவைப் பாடற்பகுதியால் அறியலாம். கோவை நூல்கள், பாங்கன் இடித்துரைத்தலைக் கழறியுரைத்தல்' என்றும், தலைவன் மறுத்துக் கூறுவதைக் கழற்றெதிர் மறை' என்றும் துறைப்பெயர்கள் வகுத்துக் கூறும். தலைவனது உரையைக் கேட்ட பாங்கன், கம் அன்பனுக்குக் கவற்சி பெரிதாயிற்று. இனி, யானும் இவனுடன் கூடி வருந்தி னால் இவனை ஆற்றுவிப்பார் இல்லையாம்' என்று ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு, அது கிடக்க: நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்தது, எத்தன்மையது ?" என்று இயல், இடம் முதலியவற்றை உசாவுவான். உடனே, தலைவன் க்ோடையால் தெறப்பட்டு வாடி கின்ற சந்தனமரம் மழை பெற்றுத் தளிர்த்தர்ற் போலப் பெரியதொரு கழிபுவகை மீதுரா, அவளை எய்தினாற் போல ஆறுதலடைந்து, நண்பனே, இன்ன சோலையில் இன்ன அழகு உடையது காண், யான் கண்ணுற்ற அவ்வின்ப உருவம்’ என்று கூறுவான். பாங்கனும், நீ கூறியவளை என்னால் ஆவதுண்டேல் கண்டு வருவல் : அத்துணையும் நீ ஆற்றியிரு:” என்று தலைவனுக்குக் கூறிவீட்டுத் தனியனாய் அவ்விடம் நோக்கிச் செல்வான். அங்ங்ணம் சென்றவன், முன் போல ஆயவெள்ளம் விளையாட்டு விருப்பால் பிரியத் தனியளாகி நின்ற தலைவியைத் தன்னை அவள் காணாமல், தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் மறைந்து சின்று அவளைக் காண்பான். உடனே, *இச்சோலையே அவனால் காணப்பட்ட இடம் : ஈண்டு கிற்கும் இவள் போலும் எம்மிறைவனை வருத்தியவள்" என்று துணிவான். மேலும், அவன் இததகைய பேரெழிலுடையாளைக் கண்டு, பிரிந்து இங்கு கின்று, அங்கு வந்து யான் கழறவும் ஆற்றி, அத்தனையும் தப்பாமல் சொன்ன அண்ணலே திண்ணியான் என்று தலைவனை 14 திருக்கோவை - 23