பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள் — (1) 9S ஒழுகுதலின்றித் தன்னைப் பேணியொழுகுதல், உண்டி என்பது, உண்ணும் அளவிற்குறைதல். செய்வினை மறைத்தல் என்பது, பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல். அன்றியும், தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருமத்தினைப் புலப்பட விடாது தோழியை மறைத்தலும் என்றுமாம். செலவினும் என்பது, எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒரு திசையை நோக்கிச் சேறல். பயில் வினும் என்பது, ஓரிடத்துப் பயிலுதல். புணர்ச்சி எதிர்ப்பாடு. என்பது, புணர்வதற்கு முந்துற்ற காலம். உள்ளுறுத்தல் என்பது உட்கோடல். இந்த ஏழினசலும் எழும் மன் கிகழ்ச்சியை ஒன்றேன டொன்று ஒவ்வாத வேறுபட்டனவாகி இரு பொருள் பயக்கும் சொற்களாலே ஆராய்வாள் தோழி என்பது. இதற்கு கச்சினார்க் இனியர் கூறும் உரையும் மிக நயமாக அமைந்துள்ளது.* இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் தலைவியும் தோழி யும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வருதலால் தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் கண்டுணர்தல். அஃதாவது, தலைவியும் தோழி பும் தினைப்புனங்காத்து கின்றவிடத்துத் தலைவன் கையுறை கொண்டுவந்து நின்று, இத்தழ்ை துமக்கு உடையாதற்கு ஏற்றது" என வும், இவ்வணி விேர் அணிதற்கு உரியது எனவும் கூறி அவள் பாற் குறை வேண்டுவான் போல கிற்க, தோழி ஆப்போது நிகழும் அவ்விருவர் மெய்ப்பாடுகளையும் உணர்ந்து அவ்விருவர்க்கும் கூட்டமுண்மை துணிவாள். ஏனல் காவல் இவளும் அல்லள் : மான்வழி வருகுவன் இவனும் அல்லன் : கரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரங்த வுள்ளமொடு கருதியது பிறிதே ! நம்முன் கானுநர் போலத் தம்முள் மதுமறைக் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப ; சொல்லும் ஆடுப கண்ணி னானே'." என்ற அழகிய பாடலில் தோழியின் உய்த்துணர்வு கூறப்பெறு: தலைக் கண்டு மகிழ்க. - •o - மேற்கூறிய மூன்று முறையாலும் முறையே ஆராய்வதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம் இது: "இம்மூன்றினும் ஒன்று கண்டுழி 8. களவியல். நூற். 33 - இன் உரை (நச்சி.) 9. களவியல் (நச்சி)- 23-ஆம் நூற்பாவின் உரைமேற்கோள்.