பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள் -(1) 10 களாக விரித்துப் பேசும். இவ்வாறு அலைக்கும் செயல் ப்ேடிக்கு மாயின், தலைவன் மனம் நொந்து தோழியை நோக்கி, இன்றினுாங் கெல்லசம் இக்கருமம் நின்னால் முடியும் எனக் கருதி வந்து உழக் தேன்; இனி கின்னால் முடியாமை உணரப்பட்டது : பட்டமையான் இனி இளிவந்தன செய்தாயினும் முடிப்பல்” என்று தன் உள்ளக் கிடக்கையை அவளுக்கு உரைப்பான். இளிவந்த கசரியமாவது மடலேறுதல், வசைபாய்தல் முதலியன. மடலேறுதல் என்பது, முற்காலத்தே தாம் விரும்பிய பெண்டிர் பொருட்டுச் செய்துகொள் ளும் தற்கொலை முறை என்பது முன்னரே விளக்கினோம்.' மடன்ேறும் தலைவனிடம் உள்ள படத்தைக் கண்டு இன்னவளுக் கும் இவனுக்கும் கட்ட உண்டு’ என்பதை அறிந்து அதனை வெளிப் படக் கூறிப் பழிப்பர் அது கேட்டுத் தமர் மணம் புணர்விப்பர். மடலேறும் தலைவன் றுே, எருக்கமாலை, ஆவிரம் பூமாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று தெரிகின்றது. மடலேற்றைக் குறித்த வேறு பல செய்திகளைத் திவ்வியம் பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல், சிறிய திருமடல் என்பவற்றின் வியாக்கியானங்களால் உணரலாம். இவ்வாறு தலைவன் மடலேறு தலைப் பற்றிய செய்தி கலித்தொகைப் பாடல்களில் கூறப்பெற். றுள்ளது. தொல்காப்பியரும் இதனை, - தோழி" ه هه * ع۹د ه* مو ٫ ی. நீக்கலி னாகிய நிலைமையும் கோக்கி மடல்மா கூறும் இடனுமா ருண்டே..”* என்று கூறுவர். இதற்கு கச்சினார்க்கினியர், தோழி இஷ் விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட கிறுத்தலின் தனக்கு. உண்டாக்கிய வருத்தத்தையும் பார்த்து அச்சேட்படையான் மடலேறுவல் எனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு’ என்று: பொருள் கூறுவர். இடனும் என்பதிலுள்ள உம்மையால் வரை பாய்தல் எனக் கூறும் இடனும் உண்டு என்று அவர் கருதுவர். மாவென மடலும் ஊர்ப பூவெனது குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப ; மறுகின் ஆர்க்கவும் படுப ; பிறிதும் ஆகுப, காமம்காழ்க் கொளினே.-- {மா - குதிரை மடல் - பனைமடல் : கண்ணி - மாலை : மறுகு - வீதி ஆர்க்க - ஆரவாரிக்க காழ்க்கொள்ளுதல் - முதிர்தல்.1 12. இந்நூல் பக்கம் 41, 50, 13. கலி 138.141 பாடல்கள். 14. களவியல் . நூற். 11. (இளம்.) 15. குறுங் - 17.