பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள்-(1) 105 வருகை குறிப்பனவாகக் கொண்டு, தோழி தலைவியை அல்ல குறிப்படுத்தி த் தவறிப் போதலும் உண்டு. இதனைத் தொல் காப்பியர், அல்ல.குறிப் படுதலும் அவள்வயின் உரித்தே அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே. 28 என்றும், 'குறியின் ஒப்புமை மருள்தற் கண்ணும் என்றும் குறிப்பிடுவர். கொடுமுள் மடற்றாழைக் கூம்பவிங்த ஒண்பூ இடையுள் இழுதொப்பத் தோன்றிப்-புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன் செய்தான் தெளியாக் குறி. (கூம்பு-குவிதல் : இடைஉள் - நடுவேயுள்ள சோறு : இழுது. வெண்ணெய் : புடை-பக்கம்} என்ற பாடலில் தோழியும் தலைவியும் அல்ல குறிப்பட்டதை அறிக. அல்ல குறி-தவறுதலான குறி. தலைவியும் தோழியும் அல்ல குறிப்பட்டுப் பெயர்ந்தபின் தலைவன் வழக்கம்போல் வந்து தலைவியைக் காணாது சிறைப்புறத்து மயங்கி கின்றானாக, அதனையறிந்த தோழி தலைவனுக்குக் கேட்கும்படியாக இல்லின் பக்கலிலிருந்து கூறியது இப்பாடல். இவ்வாறு அல்ல குறிப்பட்ட மறுநாட்காலையில் தலைவியும் தோழியும் குறியிடம் வந்து நோக்க, தலைவன் குறித்த குறியிடத்தே தான் வந்து சென்றதற்கு அடையாளமாகக் கோட்டினும் கொடி யினும் இட்டுவைத்த மோதிரம், மாலை, முத்தம் முதலியவற்றைக் கண்டு மயங்கி அவர் வருந்துவர். தலைவனும் அவரிட்ட குறி பிழைத் தமைக்கு இரங்கிச் செல்வன். இங்ங்னம் இரவுக்குறியில் பலகாலும் தலைவன் வருங்கால் வேறு சில இடையூறுகளாலும் தலைவி குறியிடம் சேர்வதற்கியலாது போவதுண்டு. தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், கிலவு வெளிப் படுதல், கூகை குழறல், கோழி குரற்காட்டல் போல்வன மேற்குறிப் 23. களவியல் - நூற்பா 43 (இளம்.) 24. ைநூற்பா - 2.1 (அடி-24) 25. ஐந்திணை ஐம்பது - செய். 49.