பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii தொடங்கியது. மனிதனிடம் விழிப்பு ஏற்பட்டது. அவன் தன்னையுணர்ந்தான்; தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கை யுலகினை யும் கண்டுகொண்டான் அறிவியல் ஆராய்ச்சியில் கசட்டங் கொண்டான். சோதனை மூலம் காணும் உண்மையே உண்மை யென்றும், சமய நூல் ஆராய்ச்சியால் சுரணும் முடிவு உண்மையல்லவென்றும் உணர்ந்தான் வெறும் தருக்க வாதத்தால் யாதொரு பயனும் விளைவதில்லை என்பதையும் தெளிக் தான். இங்கிலையில் சில மாலுமிகள் துணிந்து தம் உயிரையும் பொருட் படுத்தாது நீண்டகாலம் கப்பல் பயணம் செய்து புதுகிலப் பகுதி களைக் கண்டுபிடித்தனர். இதனால் புதிய உணர்ச்சிகள் மக்கள் இதயத்தில் மலர்ந்தன. விடுப்பூக்கம் (instinct of curiosity) மிக வன்மையுடன் செயற்படத்தொடங்கியது. புதிய கைத்தொழில்கள் தோன்றி வளர்ந்தன. இதனால் மக்களிடையே செல்வமும் பெருகியது: வாழ்க்கை கிலை பல்லாற்றானும் உயர்ந்தது. பழைய இலக்கியங்கள் புதிய கண்கொண்டு ஆராயப்பெற்றன; திறக் தெரிந்து ஆராயப்பெற்றன. கலை, இலக்கியம், சிற்பம், சமயம் முதலிய துறைகளிலும் புத்துணர்ச்சி தோன்றி வளர்ந்தது. இங்ங்னம் ஒரு புது புகமே தோன்றிவிட்டது. இங்கிலையே மேனாட்டில் தோன்றிய மறுமலர்ச்சியாகும். நீண்ட காலமாக வெளியிற் புலப்படாமல் அமைதியாய்ப் பாவிச் சமுதாயத்தை உள்ளுர இயக்கி வரும் பல்வேறு ஆற்றல்கள் சிற்சில காரணங் களால் திடீரென்று மிக வேகத்துடன் எழுந்து முழுவன்மையுடன் சிலர் வாயிலாக வெளிப்படடுச் சமுதாயம் முழுவதும் அதிர்த்து எதிரொலிக்கச் செய்து முன்னேற்றப்பாதையில் விசைக்து பாயும் கிலைமையே மறுமலர்ச்சி என்பதை ஈண்டு காம் தெளிவாக உணர்தல் வேண்டும். 2 மேலே குறிப்பிட்டவாறு பதினான்காவது நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு முன்னால் ஐரோப்பாவில் நிலவிய இருள் கிலைமையைப் போன்றதொரு நிலை சற்றேறக்குறை. நூறு பாண்டுகட்கு முன்னர்த் தமிழ்நாட்டிலும் நிலவியது என்று சொல்லலாம். இங்குச் சமயப் பூசல்களும் வாதப் போர்களும் எம்மருங்கும் காட்சி யளித்தன. சைவ-வைணவப் பூசல்கள், வைதிக-கிறித்தவப் போர்கள் எங்கும நிகழ்ந்தவண்ண மிருந்தன. அத்வைத சண்டமாருதங்கள். தருககக் குடாரங்கள், ஆபாச நிரசனங்கள், அருட்பா-மருட்பாப் போக்ள் மக்களது அறிவினைச் சூறையாடி வந்தன. சிவஞான முனிவர், அரசன் சண்முகனார், ஆறுமுக காவலர் போன்ற பேரறிஞர்களும் இவ்வித விகோத விளையாட்டு