பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0 £ தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பிட்ட இடையூறுகளாகும். இவை யாவும் ஒருங்கே வரும் 'இரும் பிழிமசரி' என்ற அகப்பாட்டு படித்து மகிழ்வதற்குரியது. - களவுக்காலத்தில் தலைவன் தன் தோழர்களுடன் கலந்து கொள்ளும் விளையாட்டினையும் திருவிழாச் செயல்முறைகளையும் தவிர்க்கமாட்டான். அங்கனம் அவன் அவற்றை விலகியொழுகுவா னாயின் அவன் வராமைபற்றி அவனைப் பலரும் வினவ, அது கான்மாக அவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகும். எனவே, அவன் அங்ஙனம் நீங்கியொழுகுதல் கூடாது என்பர் ஆசிரியர். இக்களவொழுக்கத்திற்கு முழுத்தமும் (முகூர்த்தமும்) காளும் துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவனிடம் இல்லை." ஆங்கணமே, தலைவன் வழியருமையும் நெஞ்சழிதலும் அஞ்சுதலும் இடையூறும் ஆகியவை தலைவன்பால் நிகழ்தல்கூடாது என்பர் ஆசிரியர். இதனை, ஆறின திருமையும் அழிவும் அச்சமும் ஊறும் உளப்பட அதனோ சற்றே.28 என்ற நூற்பாவால் அறியலாம். இனி, எஞ்சியுள்ள வரைவுகடாதல், அறத்தொடு கிற்றல், உடன்போக்கு என்ற மூன்று பகுதிகளையும் அடுத்துக் காண்போம். 26. அகம் 122 27. களவியல் - நூற்பா 45 (இளம், 28. களவியல் நூற்பா 46 (இளம்.)